கடையநல்லூரில் மத்திய குழுவினர் நெல்லையில் ஆய்வு!

டெங்கு காய்ச்சல் தொடர்பாக 6 பேர் கொண்ட மத்திய குழுவினர் நெல்லை மாவட்டத்தில் இன்று ஆய்வு நடத்தினர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு தனி வார்டுகளில் உள்ள நோயாளிகளிடம் சிகிச்சை விவரங்களை கேட்டனர். நெல்லை மாவட்டம், கடையநல்லூரில் கடந்த மாதம் 18ம் தேதி டெங்கு காய்ச்சல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வடகரை, தென்காசி, கடையம், சுரண்டை, நெல்லை ஆகிய பகுதிகளுக்கும் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவியது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், கொசு, புழுக்களை அழிக்கவும், சுகாதாரத்துறை நட வடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. டெங்கு காய்ச்சல் பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும், உயிர்ப்பலி எண்ணிக்கை தினமும் உயர்ந்து கொண்டும் buy Viagra online போனது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிறப்பு வார்டுகள் திறந்தாலும் அதிகரித்து வரும் குழந்தைகளை அனுமதிக்க இடம் இல்லாமல் ஒரே படுக்கையில் 2, 3 பேரையும், தரையில் படுக்க வைத்தும் சிகிச்சையளித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 38 பேர் பலியாகியுள்ளனர். நெல்லையில் தொடங்கிய டெங்கு காய்ச்சல் தற்போது தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட தென்மாவட்டங்களுக்கும் பரவி வருகிறது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இணை இயக்குனர்கள் டாக்டர் ஸ்ரீவத்ஸவா, சி.எஸ். அகர்வால், மருந்துகள் ஆலோசகர் டாக்டர் டி.கே. சர்மா, குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஹரிஸ் செலானி, பாண்டிச்சேரி ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, சென்னையைச் சேர்ந்த முதுநிலை மண்டல இயக்குனர் டாக்டர் நிர்மல்ஜோ ஆகிய 6 பேர் கொண்ட மத்தியக்குழுவினர் நேற்று நள்ளிரவு நெல்லை வந்தனர்.

இந்தக் குழுவினர் டெங்கு காய்ச்சலின் தீவிரம் குறித்து நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் செல்வராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் நிர்மல் சென், மீரான் முகைதீன் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தினர். பின்னர் நெல்லை மருத்துவக்கல்லூரிக்கு சென்ற மருத்துவக்குழுவினர் டெங்கு காய்ச்சலின் தற்போதைய நிலவரம், பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், இதுவரை நிகழ்ந்துள்ள இறப்புகள் ஆகியவை குறித்து தீவிரமாக ஆய்வு நடத்தினர்.

தகவல்:பஷீர்,நாராயணன்

Add Comment