ஆஷஸ் டெஸ்ட்: பீட்டர்சன் இரட்டை சதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்டில், கெவின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து தூள் கிளப்ப, இங்கிலாந்து அணி முதல் Cialis No Prescription இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் “டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 245 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 317 ரன்கள் எடுத்திருந்தது. குக் (136), கெவின் பீட்டர்சன் (85) அவுட்டாகாமல் இருந்தனர்.
பீட்டர்சன் அபாரம்:
நேற்று 3ம் நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு குக், பீட்டர்சன் ஜோடி ரன்மழை பொழிந்தது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 175 ரன்கள் சேர்த்தபோது குக் (148) அவுட்டானார். அடுத்து வந்த கோலிங்வுட் (42) ஓரளவு கைகொடுத்தார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் பீட்டர்சன், டெஸ்ட் அரங்கில் தனது 2வது இரட்டை சதம் அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 551 ரன்கள் எடுத்து, 306 ரன்கள் முன்னிலை வகித்திருந்த போது மழை குறுக்கிட்டதால், 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பீட்டர்சன் (213), இயான் பெல் (41) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ரேயான் ஹாரிஸ் 2, போலிஞ்சர், வாட்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Add Comment