4 விதமான மின்கட்டணத்தால் நடுத்தர மக்கள் மாத வருமானத்தையே இழக்கும் பரிதாபம்!

தமிழகத் தில் வீடுகளுக்கான மின்கட்டணம் 4 விதமாக வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அம லுக்கு வந்தது. மின்கட்ட ணம் பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கும், மின் கணக்கீட்டா ளர்களுக்கும் இதுகுறித்த விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படாததால்  குழப்பம் நிலவி வருகிறது. தேவையில்லாமல் அதிக தொகை செலுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.

புதிய மின்கட்டண விகிதம் பழைய முறையை விட முற்றிலும் மாறுபட்டிருப்பதுதான் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. புதிய முறைப்படி வீடுகளுக்கு ஏ, பி, சி, டி என 4 விதமாக பிரித்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி ‘ஏ’ பிரிவில் முதல் 100 யூனிட் வரை ரூ.1 கட்டணமும், நிலையான கட்டணம் ரூ. 20ம் செலுத்த வேண்டும். ‘பி‘ பிரிவில் முதல் 200யூனிட் வரை ரூ.2ம், ரூ.30 நிலை யான கட்டணமும் செலுத்த வேண்டும். பழைய முறை யில் 200 யூனிட் வரை சென் றால் முதல் 100 யூனிட் வரை ரூ.1ம், அதற்கு அடுத்த 100 யூனிட்டிற்கு ரூ.2ம் கட்டண மாக செலுத்தும்நிலை இருந் தது. புதிய முறையில் 200 யூனிட்டிற்குமே ரூ.2 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இதே போல் ‘சி‘ பிரிவில் 500 யூனிட் வரை முதல் 200 யூனிட்டிற்கு ரூ.2ம், 200 முதல் 500 யூனிட் வரை ரூ. 300ம் நிலைகட்டணமாக ரூ. 30ம் செலுத்தவேண்டும். 500 யூனிட்டை தாண்டி னால் முதல் 200 யூனிட் வரை ரூ.3ம், 200 முதல் 500 யூனிட் வரை ரூ.4ம், 500க்கு மேல் வரும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் ரூ.5.75 பைசாவும் அத்துடன் நிலைகட்டணமாக ரூ.40ம் செலுத்தவேண்டும்.

குறைந்தபட்ச மின்சார பயன்பாடு Buy cheap Cialis 1000 யூனிட் வந் தால் ரூ.4675 மின்கட்டணமாகவும், ரூ.40 நிலை கட்டணமும் செலுத்தவேண்டும். இது காம்ப்வுண்ட் வீடுக ளில் குடியிருப்பவர்களை கடுமையாக பாதித்துள்ளது. நடுத்தரவாசிகளை பொறுத்தவரை சொற்ப அளவில் சம்பாதிக்கும் மாத வருமானத்தை அப்படியே மின்கட்டணத்திற்கு செலுத்த வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு சட்டமன்றத்தில் மின் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்ததற்கேற்ப  மின்வாரியம் மின்கட்டணத்தை குறைக்கவில்லை. குளறுபடிகளை தவிர்க்கவும், பொதுமக்களை பாதிப்பில் இருந்து மீட்கவும் முதல் 500 யூனிட் வரை ஒரே விகிதத்திலும், அதற்கு மேல் 1000 யூனிட் வரை ஒரே வித கட்டணத்தையும் அறிவித்தால் மட் டுமே பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்ப முடியும்.

-தினகரன்

Add Comment