கொச்சி அணிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி *ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும்

உரிமையாளர்கள் பிரச்னையில் சிக்கிய கொச்சி அணிக்கு, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி தந்துள்ளது. இதன்மூலம் நான்காவது ஐ.பி.எல்., தொடரில் கொச்சி பங்கேற்பது உறுதியாகி உள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், கடந்த மூன்றாண்டுகளாக “டுவென்டி-20′ தொடர் வெற்றிகரமாக நடந்தது. நான்காவது தொடரில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.பி.எல்., அணிகள் ஏலத்தில் புனே (ரூ.1702 கோடி) மற்றும் கொச்சி (ரூ. 1533 கோடி) அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டன.
இதில், கொச்சி அணியில் ஆங்கர் எர்த், பரினி டெவலபர்ஸ், ரோசி புளூ மற்றும் பிலிப் வேவ் ஆகியவற்றுக்கு 74 சதவீத பங்குகள் உள்ளன. மீதம் உள்ள 26 சதவீத பங்குகள் ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் வேர்ல்டு நிறுவனத்திடம் இருந்தது. இந்த அணியை ஏலத்தில் எடுக்க ரெண்டஸ்வஸ் உதவியதால், இப்பங்குகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதனிடையே, கொச்சி அணியை நிர்வகிப்பதில், உரிமையாளர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் ஒப்பந்த விதிகளை மீறியதால் கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் உரிமை ரத்துசெய்யப்பட்டது. இதனால் இந்த இரு அணிகள் அடுத்த தொடரில் பங்கேற்க முடியாது. ஆனால் கொச்சி அணிக்கு, தங்கள் சிக்கலை தீர்த்துக்கொள்ள ஐ.பி.எல்., நிர்வாகம், கால அவகாசம் தந்தது.
மேலும் அவகாசம்:
இந்தக் கெடு முடிந்த நிலையில் கடந்த வாரம் நாக்பூரில், பி.சி.சி.ஐ., இறுதிமுடிவு எடுக்க இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் 10 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொள்வதாக ரெண்டஸ்வஸ் நிறுவனம் அறிவிக்க, காலக்கெடு மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. பின், கொச்சி அணியின் உரிமையாளர்கள் குறித்த புதிய பட்டியல் பி.சி.சி.ஐ., நிர்வாகத்திடமும் அளிக்கப்பட்டது.
பங்கேற்க அனுமதி:
இது குறித்து முடிவெடுக்க, பி.சி.சி.ஐ., ஆட்சிக் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த இந்த கூட்டத்தின் முடிவில், கொச்சி அணியின் உரிமையாளர்கள் விபரத்தை, ஐ.பி.எல்., ஆட்சிக்குழு Buy Lasix ஏற்றுக்கொண்டது. இதனால் நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க, கொச்சி அணிக்கு பி.சி.சி.ஐ., அனுமதி வழங்கியது.
இதையடுத்து கடந்த ஏழு மாதங்களாக நிலவி வந்த சிக்கல் முடிவுக்கு வந்ததை, அடுத்த தொடரில் எட்டு அணிகள் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன் கூறுகையில்,”” கொச்சி அணியின் உரிமையாளர்கள் விபரம் திருப்தி தருவதாக ஐ.பி.எல்., ஆட்சிக்குழு நேற்றைய கூட்டத்தில் தெரிவித்தது. இதனால் அந்த அணி வரும் 2011, ஏப்., 8ல் துவங்கும் நான்காவது தொடரில் பங்கேற்க அனுமதி தரப்பட்டது,” என்றார்.

Add Comment