செர்பிய அணிக்கு மீடியா பாராட்டு

முதன்முறையாக டேவிஸ் கோப்பையை கைப்பற்றிய செர்பிய டென்னிஸ் அணிக்கு, அந்நாட்டு மீடியா பாராட்டு தெரிவித்துள்ளன.
செர்பிய தலைநகர் பெல்கிரேடில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக சுற்றுக்கான பைனல் நடந்தது. இதில் செர்பியா-பிரான்ஸ் அணிகள் மோதின.
இதில் செர்பிய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக டேவிஸ் கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. செர்பியா சார்பில் நோவக் டோகோவிச் (ஒற்றையர், மாற்று ஒற்றையர்), விக்டர் டிராய்ஸ்கி (மாற்று ஒற்றையர்) வெற்றி பெற்றனர். பிரான்ஸ் சார்பில் மோன்பில்ஸ் (ஒற்றையர்), சிலிமன்ட்-லோட்ரா ஜோடி (இரட்டையர்) வெற்றி பெற்றனர்.
இதன்மூலம் டேவிஸ் கோப்பை வென்ற 13வது அணி என்ற பெருமையை செர்பியா பெற்றது. இதுவரை டேவிஸ் கோப்பை buy Levitra online அரங்கில் அமெரிக்கா 32, ஆஸ்திரேலியா 28 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
முதன்முறையாக கோப்பை வென்று சாதித்த செர்பிய அணிக்கு, அந்நாட்டு மீடியா பாராட்டு தெரிவித்துள்ளன.
இது குறித்து பிளிக் பத்திரிகையில் வெளியான செய்தி: டேவிஸ் கோப்பையில் சாம்பியன் பட்டம் கைப்பற்ற வேண்டும் என்ற செர்பியாவின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளது. டென்னிஸ் அரங்கில் உலக சாம்பியன் என்பதை செர்பிய அணி நிரூபித்துள்ளது.
இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Add Comment