ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் சென்றுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இந்நிலையில் 3வது போட்டி தாகாவில் நேற்று நடந்தது. “டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே கேப்டன் உட்சேயா, “பீல்டிங்’ தேர்வு செய்தார்.
சாகிப் அபாரம்:
முதலில் பேட் செய்த வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0) மோசமான துவக்கம் கொடுத்தார். அடுத்து வந்த சித்திக் (1) சோபிக்கவில்லை. மற்றொரு துவக்க வீரர் இம்ருல் கெய்ஸ் (33) ஆறுதல் அளித்தார். “மிடில்-ஆர்டரில்’ வந்த ரகிபுல் ஹசன் (12) ஏமாற்றினார். பின்னர் இணைந்த கேப்டன் சாகிப் அல் ஹசன் (73), முஸ்பிகுர் ரஹிம் (63) ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே Viagra online சார்பில் உட்சேயா 4 விக்கெட் வீழ்த்தினார்.
ரசாக் துல்லியம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியை, அப்துர் ரசாக் சுழலில் மிரட்டினார். இவரது துல்லிய பந்துவீச்சில் பிரண்டன் டெய்லர் (15), சிபாபா (7), மசகட்சா (3), சகப்வா (5) உள்ளிட்டோர் அவுட்டானார்கள். பொறுப்புடன் ஆடிய கேப்டன் உட்சேயா (67) ஆறுதல் அளித்தார். எர்வின் (5), மசகட்õ (14), பிரைஸ் (14) உள்ளிட்டோர் ஷபியுல் இஸ்லாம் பந்தில் வெளியேறினர். ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில் 181 ரன்களுக்கு “ஆல்-அவுட்’ ஆனது.
வங்கதேசம் சார்பில் அப்துர் ரசாக், ஷபியுல் இஸ்லாம் தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் வங்கதேச அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அப்துர் ரசாக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நான்காவது போட்டி சிட்டகாங்கில் வரும் 10ம் தேதி நடக்கிறது.
வாசகர் பக்கம்
-
காந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..!
-
பீட்டாவும் கோரமுகம்…
-
குழந்தயின்மையிலிருந்து விடுப்புக்கு ஆலோசனை
-
அன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்
-
சசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.
-
ஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..
-
உண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.
-
யதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..
-
சாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.
-
இப்படியும் ஒரு நீதிபதியா!