இந்திய அணியின் வெற்றி தொடருமா:இன்று நியூசிலாந்துடன் 4வது மோதல்

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடக்கிறது. ஏற்கனவே தொடரை வென்று விட்ட இந்திய அணி, மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கேற்றுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை வென்று விட்டது. இன்று பெங்களூரு, சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும், நான்காவது (பகலிரவு) போட்டியில் காம்பிரின் இளம் இந்திய அணி, வெட்டோரியின் நியூசிலாந்து அணியை மீண்டும் சந்திக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் “சீனியர்கள்’ சச்சின், தோனி, ஹர்பஜன், சேவக் ஆகியோர் இல்லாத நிலையிலும், காம்பிரின் இளம் இந்திய இரண்டாம் தர அணி, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை வென்றது, உலக கோப்பை தொடருக்கு நல்ல முன்னோட்டமாக அமைந்துள்ளது.
கேப்டன் காம்பிர் (38, 138*, 126*), விராத் கோஹ்லி (105, 64, 63*) இருவரும் மிரட்டலான பார்மில் உள்ளனர். துவக்க வீரர் முரளி விஜய் கடந்த போட்டிகளில் எடுத்த ரன்களை(29, 33, 30) விட, அதிகமாக எடுத்தால் நல்லது. இல்லையெனில் அணியில் இவரது இடம் கேள்விக்குறியாகி விடும். “மிடில் ஆர்டரில்’ யுவராஜ் சிங், சவுரப் திவாரி ஆகியோர் ரன்கள் குவிக்க காத்திருக்கின்றனர். பின் வரிசையில் யூசுப் பதான் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் <உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சகாவுக்கு பதில் இடம் பெறும் பார்த்திவ் படேல், ரோகித் சர்மா போன்றவர்களும் இன்று சாதிக்கலாம்.
அஷ்வின் ஏமாற்றம்:
வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், கடந்த போட்டியில் அனுபவத்தை வெளிப்படுத்தினார். இவருடன் பிரவீண் குமார், முனாப் படேல் இன்று ஆறுதல் தர வேண்டும். சுழல் பந்து வீச்சில் அஷ்வின், யூசுப் பதான், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் சிக்கனமாக செயல்பட்டால், மீண்டும் ஒரு வெற்றியை இந்தியா தட்டிச்செல்லலாம்.
பரிதாப நியூசி.,:
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-4 என மட்டமாக தோற்ற நியூசிலாந்து அணி, இந்திய மண்ணிலும் மோசமான தோல்வியை தழுவி வருகிறது. டெஸ்ட் தொடரை அபாரமாக துவக்கிய நியூசிலாந்து அணி, ஒருநாள் தொடரில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்கிறது. கடந்த 1975-76க்கு பின், இந்த அணிக்கு இது தான் மிக மோசமான தொடராக அமைந்துள்ளது. பேட்டிங்கில் கப்டில், பிரண்டன் மெக்கலம் இம்முறையாவது எழுச்சி காண வேண்டும். ரோஸ் டெய்லர், ஸ்டைரிஸ் மற்றும் வில்லியம்சன் சொதப்பல் தொடர்வது, கேப்டன் வெட்டோரிக்கு கெட்ட செய்தி. அதேநேரம், பிராங்க்ளின் ரன்கள் குவிப்பது சற்று ஆறுதல் தான்.
பவுலிங் ஏமாற்றம்:
பவுலிங்கை பொறுத்தவரை கேப்டன் வெட்டோரியுடன், இணைந்து இந்திய வீரர்களுக்கு நெருக்கடி தரக்கூடிய வகையிலான வீரர்கள் இல்லாதது பெரும் பலவீனமாக <உள்ளது. முதல் போட்டியில் மட்டும் கைகொடுத்த மெக்கே, ஆல் ரவுண்டர் கைல் மில்ஸ், நாதன் மெக்கலம், டிம் சவுத்தி ஆகியோரும் விக்கெட் கைப்பற்றினால் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.
“ஒயிட் வாஷ்’:
தொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நியூசிலாந்து அணிக்கு, முன்னணி வீரர்கள் கைகொடுத்தால், நீண்ட… இடைவெளிக்குப் பின் முதல் வெற்றியை ருசிக்கலாம். ஆனால் தொடரை 5-0 என, முழுமையாக வெற்றி (ஒயிட் வாஷ்) பெறும் நோக்கத்தில் இருக்கும் இளம் இந்திய வீரர்கள், அவ்வளவு எளிதாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதால், கடும் போராட்டத்தை எதிர்பார்க்கலாம்.
நான்காவது தொடர் தோல்வி
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணி ஒருமுறை கூட கோப்பை வென்றது இல்லை. கடந்த 1988-89 (0-4), 1995-96 (2-3), 1999-00 (2-3) ஆகிய தொடர்களில் தோல்வியடைந்த இந்த அணி, இம்முறையும் (0-3) என்ற கணக்கில் தொடரை இழந்து பரிதாபத்தில் உள்ளது.
ராசியான சின்னச்சாமி மைதானம்
* பெங்களூருவில் இந்தியா பங்கேற்ற 15 போட்டிகளில் 10 ல் வெற்றி, 4ல் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
* நியூசிலாந்துக்கு எதிராக இங்கு விளையாடிய 2 போட்டிகளிலும் இந்திய அணியே வென்றுள்ளது.
* இங்கு இந்தியா அதிகபட்சமாக 315 (ஆஸ்திரேலியா, 2001) ரன்கள் எடுத்துள்ளது. குறைந்த அளவாக 168 (பாகிஸ்தான், 1999) ரன்களுக்கு ஆல் அவுட்டானாது.
* தற்போதுள்ள வீரர்களில் காம்பிர் 3 போட்டிகளில் 82 ரன்கள் எடுத்துள்ளார்.
* பவுலிங்கில் ஜாகிர் கான் 8 விக்கெட் (5 போட்டி) வீழ்த்தியுள்ளார்.
தென் ஆப்ரிக்க சென்ற வீரர்கள்
இந்திய அணி, தென் ஆப்ரிக்காவில் வரும் டிச., 15 முதல் மூன்று டெஸ்ட், ஒரு “டுவென்டி-20′, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் பங்கேற்கும் சேவக், உமேஷ் யாதவ், உனாட்கட், புஜாரா மற்றும் பயிற்சியாளர் கிறிஸ்டன் அடங்கிய ஐந்து பேர்கள் கொண்ட அணி, நேற்று தென் ஆப்ரிக்கா புறப்பட்டு சென்றனர். தோனி, சச்சின் அடங்கிய மற்றொரு பிரிவினர், நாளை தென் ஆப்ரிக்கா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெட்டோரி புலம்பல்
இன்றைய போட்டியில் “டாப் ஆர்டர்’ Buy cheap Ampicillin வீரர்கள் சாதிக்க வேண்டும் என நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,”” அதிகமான ரன்கள் எடுக்காதது, பல்வேறு வகைகளில் இந்திய வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்காதது போன்றவைகள் தான் தோல்விக்கு முக்கிய காரணம். தவிர, காம்பிர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடுகின்றனர். இவரை விரைவில் அவுட்டாக்க முயற்சிப்போம். எங்களது “டாப் ஆர்டர்’ வீரர்கள், இன்றும் அடுத்த போட்டியிலும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்லது. ரோஸ் டெய்லர், பிரண்டன் மெக்கலம் ஆகியோர் இன்று கைகொடுப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
முழுமையாக வெல்வோம்: காம்பிர்
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டிகுறித்து இந்திய அணி கேப்டன் காம்பிர் கூறுகையில்,”” எங்களது முக்கிய இலக்கு ஐந்து போட்டிகளையும் வென்று, தொடரை 5-0 என்று கைப்பற்ற வேண்டும் என்பது தான். இதற்காக கடந்த மூன்று போட்டிகளில் விளையாடியதைப் போன்று, தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறேன். தொடரை வென்று விட்டோம் என்பதற்காக, மற்ற போட்டிகளை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்,” என்றார்.

Add Comment