கடையநல்லூரில் கந்தூரி கொண்டாட்டம் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளம்!

கடையநல்லூரில் புகழ் பெற்ற பெரிய பள்ளிவாசல் மக்தூம் ஞானியார் தர்ஹா கந்தூரி விழா வழக்கம் போல் இந்த வருடமும் சிறப்பாக நடைபெற்றது.(01.06.2012) வெள்ளிக்கிழமை மாலை சுமார் 1 மணியளவில் கொடிக்கட்டுடன் தொடங்கி கடையநல்லூரில் உள்ள முக்கிய தெருக்களின் வழியாக யானை ஊருவலத்துடன் வலம் வர இரவு சுமார் 8 மணியளவில் சந்தனக்கூடு புடை சூழ கொடியேற்றத்துடன் கந்தூரி விழா வழக்கமான உற்ச்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கடையநல்லூரில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி பின்னி பிணைந்து மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கந்தூரி கொண்டாடும் வழக்கம் கால காலமாக இருந்து வந்தது.காலங்கள் பல உருண்டோட நாகரீக வளர்ச்சி, வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் இஸ்லாத்தில் இது போன்ற அனாச்சாரங்கள்.சிர்க்கான நடைமுறைகள்,இறைவனுக்கு இணைவைத்தல் போன்ற விஷயங்கள் இஸ்லாத்தில் ஒரு போதும் கடைபிடிக்க படவில்லை என்ற ஆணித்தரமான குறிப்புகளுடன் விவாதங்கள் காரணமாக கந்தூரி கொண்டாடும் வழக்கம் கடையநல்லூர் மக்களிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதை காண முடிந்ததது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் இந்த கந்தூரி விழா கடையநல்லூர் குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு திருவிழா போல மாறி வருவதை காண முடிகிறது.எவ்வளவோ சட்டங்கள் பேசி வீட்டில் மற்றும் நண்பர்களுடன் விவாதத்தில் ஈடு படும் சிலர் தன்னுடைய குழந்தைகளுடன் சென்று ஊஞ்சல் ஆடுவது மற்றும் இன்ன பிற பொழுது போக்கு அம்சம் கொண்ட விளையாட்டுக்களை தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து ரசிப்பதை காண முடிகிறது.

இதோ உங்களின் பார்வைக்காக சில புகைப்பட காட்சிகள்.

%%wppa%%

%%slide=124%% buy Cialis online

Add Comment