புதிதாக 13 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானதாக தகவல்

நாட்டில், கடந்த 2009ம் ஆண்டு, ஐ.டி., தகவல் தொழில்நுட்பம் மற்றும் பி.பி.ஓ., உட்பட பல்வேறு துறைகளில், 13 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அமைப்பு, கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் முதல், இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஆய்வு நடத்தியது. ஐ.டி., பி.பி.ஓ., ஜவுளித்துறை, ஆட்டோ மொபைல், நகை ஆபரணத் தயாரிப்பு உள்ளிட்ட எட்டு துறைகளில் உருவான வேலைவாய்ப்புகள் குறித்து இந்த ஆய்வு நடந்தது. இதில், அதிகபட்சமாக, ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறையில் கடந்த ஆண்டில், 8.54 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானது. அதற்கடுத்த நிலையில், ஜவுளித்துறையில், 1.52 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவானது. இரும்பு உற்பத்தி துறையில், 1.37 லட்சமும், ஆட்டோமொபைல் துறையில், 1.10 லட்சமும், கற்கள் மற்றும் நகை தயாரிப்பு தொழிலில் 0.93 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகின. 2008ம் ஆண்டு அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில், வேலைவாய்ப்பில் மிகவும் பின்னடைவான நிலை இருந்தது. அந்த Bactrim online காலக்கட்டத்தில் 4.91 லட்சம் பேர் தங்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இந்த ஆண்டில், எட்டு துறைகளிலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 4.35 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 1.66 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகின. ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., ஜவுளித்துறையில் தான் அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

Add Comment