குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் உற்சாமாக குளித்து சென்றனர்.குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமலும், பின்னர் ஓரமாக நின்றும் குளித்து சென்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் லேசான மழை buy Doxycycline online மட்டுமே பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயின் அருவியில் நேற்று தண்ணீர் சற்று குறைந்து பரவலாக தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியின் 5 கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது.அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகத்துடன் குளித்து சென்றனர்.

Add Comment