துபாய் ஈமான் அமைப்பின் 35-ம் ஆண்டு விழா

துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷ்ன் (ஈமான்) அமைப்பின் 35ம் ஆண்டு விழா அமீரகத்தின் 39 வது தேசிய தினமான கடந்த 2ம் தேதி முஷ்ரிஃப் பூங்காவில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஈமான் அமைப்பின் தலைவர் சையது எம். ஸலாஹூத்தீன் தலைமை வகித்து பேசுகையில், ஈமான் அமைப்பின் 35ம் ஆண்டு நிகழ்வில் பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவரது தனித்திறனையும் மேம்படுத்த ஈமான் அமைப்பின் நிர்வாகக் குழுவினர் அதற்கேற்ப நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்றார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அமீரக நிகழ்வுகள் தன் மனதினை விட்டு நீங்காமல் இடம் பெற்று வருவதை பல்வேறு நினைவுகளுடன் விவரித்தார்.

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஈமான் அமைப்பின் கல்விக்குழுத் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், ஈடிஏ எம்.என்.இ. எக்ஸ்கியூடிவ் டைரக்டர் அன்வர் பாஷா உள்ளிட்டோர் வழங்கினர்.

Amoxil No Prescription justify;”>துணைத் தலைவர் எம். அப்துல் கத்தீம் நன்றியுரை கூறினார். நிகழ்வினை மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா ஒருங்கிணைத்தார்.

காயல் யஹ்யா முஹ்யித்தீன், முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், திருப்பனந்தாள் ஜாஹிர் உசேன், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ. லியாக்கத் அலி, துணைத்தலைவர் அஹமது முஹைதீன் முன்னிலை உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இவ்விழாவிற்கு ஈடிஏ அஸ்கான் ஸ்டார், ஆலியா டிரேடிங், ஜோர்டானோ, ஸ்டார் மெட்ரோ ஹோட்டல், திருச்சி வெல்கேர் மருத்துவமனை, யம்மி இந்தியன் ரெஸ்டாரெண்ட், ஜெனார்ட் வாட்சஸ், பிளாக் துலிப் பிளவர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் துணை நின்றன.

Add Comment