விக்கிலீக்ஸ்:கத்தர் ஆபத்தான நாடு – அமெரிக்காவுக்கு மொஸாத் அளித்த எச்சரிக்கை

கத்தர் ஆபத்தான நாடு என அமெரிக்காவுக்கு மொஸாத் எச்சரிக்கை அளித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 12 ஆம் தேதி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது மொஸாதின் முன்னாள் தலைவர் மீர் தாகன் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

2022 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தும் நாடாக கத்தர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் விக்கிலீக்ஸ் இத்தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரான், சிரியா, ஃபலஸ்தீன் போராளி இயக்கமான ஹமாஸ் உள்ளிட்ட மேற்காசியாவில் அனைத்து பிரிவினரையும் திருப்திப்படுத்துவதற்கு கத்தர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல்தானி முயற்சிக்கிறார்.

அமெரிக்க ராணுவ தளத்திற்கு அனுமதியளித்ததற்கு எதிர்ப்பு கிளம்பாமலிருக்கவே இம்முயற்சி. எல்லோருக்கும் தொந்தரவு தருவதையே கத்தர் இதன்மூலம் மேற்கொள்கிறது எனவும், கத்தரிலிருந்து ஒளிபரப்பாகும் அல்ஜஸீராவின் பல அறிக்கைகளும் மேற்காசியாவில் இன்னொரு போருக்கு தூண்டுகோலாக அமைவதாகவும் தாகன் கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தனது ராணுவ தளத்தை buy Bactrim online உடனடியாக கத்தரிலிருந்து மாற்றுவதுதான் இதற்கு ஒரே வழி என தாகன் சந்திப்பின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Add Comment