ஆர். எஸ். எஸ். அலுவலக குண்டு வெடிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை

ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை உச்சநீதிமன்றம் திங்களன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு தொடர்பாக, அபூபக்கர் சித்தீக், ரபீக் அஹமது, ஹைதர் அலி ஆகியோரை தடா சட்டத்தில்கைது செய்து வழக்கு தொடர்ந்தது சி.பி.ஐ.

இவ்வழக்கில் இம்மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் கடந்த 2007 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி. சுதர்சன் ரெட்டி மற்றும் எஸ்.எஸ்.நிசார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,

”ஒப்புதல் வாக்குமூலம் buy Cialis online அடிப்படையிலேயே மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி மூவரையும் விடுதலை செய்தனர்.

Add Comment