அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் படம் : இனி, இணையதளத்தில் பார்க்கலாம்

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்த படம் மற்றும் பேச்சுக்கள் அடங்கிய தகவலை இணையதளத்தின் வழியாக மக்கள் தெரிவிக்க வகை செய்ய, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், “விக் ஐ’ என்ற பெயரில் வெப்சைட்டை துவக்கியுள்ளது.

லஞ்ச ஒழிப்பு தினத்தையொட்டி, டில்லி விஞ்ஞான் பவனில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழாவில், மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் பி.ஜே.தாமஸ் கலந்து கொண்டார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் குறித்த படங்கள் மற்றும் பேச்சுக்களை இணைய தளத்தில், “அப்லோட்’ செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு தெரிவிக்கும் வகையில், “விக் ஐ’ என்ற பெயரில் புதிய வெட் சைட் துவக்கப்பட்டது. http://www.cvc.nic.in என்ற முகவரி மூலம் “விக் ஐ’ (விஜிலென்ஸ் ஐ என்பதின் சுருக்கம் ) வெப்சைட்டின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளலாம். டில்லி விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் இந்த வெப்சைட்டை துவக்கி வைத்தார். மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் தாமஸ் குறிப்பிடுகையில், “லஞ்ச ஊழலை தடுக்க விஜிலென்ஸ் கமிஷன் நவீன முறைகளை வகுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, “விக் ஐ’ வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தகவல் தெரிவிப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும்.

வளர்ந்த பிறகு மனிதனை திருத்துவது கடினம் என்பதால் படிக்கும் பருவத்திலேயே அறநெறிகளை பாட திட்டத்தில் புகுத்த அரசு முன்வரவேண்டும் என வற்புறுத்தியுள்ளோம்’ என்றார். “கேரள அரசில் தாமஸ் பணியாற்றிய போது, பாமாலின் இறக்குமதி செய்ததில் முறைகேடு நடந்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புத் துறையிலும் இவர் செயலராக பணியாற்றியுள்ளார். எனவே, லஞ்ச ஊழலை தடுப்பது குறித்து அறவுரை கூறிவரும் தாமசின் நடவடிக்கை நகைப்புக்குரியது’ என, பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொடர்பாளர் ஷாநவாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

“தாமசுக்கு அக்னி பரீட்சை’: முன்னாள் விஜிலென்ஸ் Buy Doxycycline Online No Prescription கமிஷனர் என்.விட்டல் குறிப்பிடுகையில், “மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள தாமஸ் திறமையான அதிகாரி. அவர் சம்பந்தப்பட்ட துறையில் ஊழல் நடந்துள்ளதால் அவர் கறைபட்டவர் என்பதாகக் கூற முடியாது. “அவர் தொடர்புடைய வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அது குறித்த முடிவுகள் வந்த பின் அவர் அப்பழுக்கற்றவர் என்பது தெரியவரும். ராமாயணத்தில் சீதைக்கு அக்னி பரீட்சை நடந்தது போல, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு அவர் தூய்மையானவர் என்பது தெரியவரலாம்’ என்றார்.

Add Comment