வாஜ்பாய் ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் இழப்பீடு ரூ.60 ஆயிரம் கோடி: ரத்தன் டாடா புகார்

“2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில், 2001ம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து ஆராய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் கருத்தை, டாடா நிறுவனங்களின் சேர்மன் ரத்தன் டாடா வரவேற்றுள்ளார். மேலும், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் தவறான தொலைத் தொடர்பு கொள்கைகளால் அரசுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே நிரா ராடியா டேப் விவகாரம் விஷயத்தில் தனிநபர் சம்பந்தப்பட்ட தகவல்கள் கசியக்கூடாது என வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில் ரத்தன் டாடா வழக்கு தொடர்ந்துள்ளார். செல்லுலார் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பா.ஜ., – ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் சுயேச்சையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி.,யுமான ராஜீவ் சந்திரசேகர், டாடா நிறுவனங்களின் சேர்மன் ரத்தன் டாடாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், டாடா அதிருப்தி அடைந்திருக்கிறார். இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு இரட்டை தொழில்நுட்பம் ( சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்.,) மூலம் டாடா தொலைத்தொடர்பு நிறுவனத்தினரால் மத்திய அரசுக்கு, 19 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய ஆடிட்டர் ஜெனரல் (சி.ஏ.ஜி.,) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் ரத்தன் டாடா, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தொலைத் தொடர்பு கொள்கைகளில் தள்ளாட்டம் ஏற்பட்டது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் டாடா நிறுவனங்கள் ஆதிகப்படியான ஆதாயத்தை அடைந்ததாக குறிப்பிடுவதை நான் மறுக்கிறேன். காரணம், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கும் மொபைல் போன்களில் பெரும்பாலானவை ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பத்தை சேர்ந்தவை. டாடா மற்றும் ரிலையன்ஸ் போன்றவையே சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்குகின்றன. டூயல் தொழில்நுட்பம் 2008ல் தான் நடைமுறைக்கு வந்துள்ளது. “2ஜி’ ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான செய்திகளை சில மீடியாக்கள் தான் மிகைபடுத்தின. இதில், யாருக்கு உண்மையான ஆதாயம் கிடைத்தது என்பது பற்றி வெளியாகவில்லை.

மீடியாக்களைப் பயன்படுத்தி எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சியில் சந்திரசேகர் ஈடுபட்டுள்ளார். மிகப் பிரபலமான ஜி.எஸ்.எம்., ஆப்பரேட்டர்கள் இலவசமாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பெற்றுள்ள நிலையில், 2001ம் ஆண்டு முதல் அலைவரிசை ஒதுக்கீட்டில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற Doxycycline No Prescription சுப்ரீம் கோர்ட் உத்தரவை வரவேற்கிறேன். எனக்கு எழுதியுள்ள இந்த கடிதம் அரசியல் நோக்கம் கொண்டதுடன் எனக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உள்நோக்கத்தடன் எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

டாடா நீதிபதியா: பா.ஜ., கேள்வி: ஸ்பெக்டரம் அலைவரிசை குறித்து ரத்தன் டாடா வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, சில ஆபரேட்டர்களுக்கு இலவசமாகவே ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது பற்றி சந்திரசேகர் எதுவும் தெரிவிக்காதது ஏன் என,ரத்தன் டாடா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், புரோக்கராக செயல்பட்ட நிரா ராடியாவின் வைஷ்ணவி நிறுவனத்திற்கும் தன் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார். ரத்தன் டாடா இவ்வாறு கூறியதையடுத்து, அதற்கு பதிலாக எம்.பி.,யான சந்திரசேகர், “டெலிகாம் கொள்கையில் டாடாவுக்கு அதிக லாபம் கிடைத்ததா இல்லையா என்பதே இப்போதைய கேள்வி’ என்றிருக்கிறார்.

இப்பிரச்னையில், காங்., செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கார்கில் போர் முடிந்த பின் ஜகன்மோகனிடமிருந்த தொலைத்தொடர்பு துறை வாஜ்பாயிடம் சென்றது. அப்போது தான் அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய இழப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தவர் பிரமோத் மகாஜன். இந்த விவகாரத்தில் பா.ஜ.,வின் நிலை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும்’ என்றார்.

Add Comment