ஆவணங்கள் கசிவுக்கு அமெரிக்காதான் பொறுப்பு, விக்கிலீக்ஸ் அல்ல – ஆஸி. அமைச்சர் அதிரடி

அமெரிக்க தூதரக தகவல் தொடர்புகள் குறித்த தகவல்கள் கசிய விக்கிலீக்ஸோ அல்லது அதன் அதிபர் ஜூலியன் அஸன்ஜேவோ காரணம் அல்ல. மாறாக அமெரிக்காதான் இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரூட். அஸன்ஜே ஆஸ்திரேலியர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கெவின் ரூட் கூறுகையில், அமெரிக்க ஆவணங்கள் வெளியாகிறது என்றால் அதற்கு விக்கிலீக்ஸையோ அல்லது ஜூலியனையோ எப்படி குறை கூற முடியும். அமெரிக்காதானே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அனைத்து ஆவணங்களுமே சட்டப்படியானவைதான். எதுவுமே சட்டவிரோதமாக வெளியிடப்படவில்லை.

அமெரிக்க பாதுகாப்பின் தரத்தைத்தான் இவை உண்மையில் அம்பலப்படுத்தியுள்ளன. தங்களது ஆவணங்களைக் கூட பாதுகாப்பாக அவர்களால் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.

இந்த விஷயத்தில் ஜூலியன் அஸன்ஜேவை குறை கூறவே முடியாது. அமெரிக்காதான் இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றார் Doxycycline online ரூட்.

கெவின் ரூட்டின் இந்தப் பேச்சுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கிலார்ட் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கெவின் ரூட் முன்னாள் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment