சிலி சிறையில் தீ:81 பேர் மரணம்

சிலி தலைநகரான சாண்டியாகோவில் அமைந்துள்ள ஸான் மிக்கேல் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 81பேர் மரணமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களில் போலீஸ் அதிகாரிகளும், சிறைக்கைதிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான காயமடைந்த 14 சிறைக்கைதிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றியுள்ளனர்.

இரண்டு கும்பலுக்கிடையே நடந்த மோதலின்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலை நடத்தியவர்கள் படுக்கைக்கு தீவைத்துக் கொளுத்தியதைத் தொடர்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது என ஆரம்பக்கட்ட அறிக்கைகள் கூறுகின்றன.

சிலியின் Bactrim online சிறை வரலாற்றில் முதன்முறையாக இத்தகையதொரு சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயிம் மனாலிக் தெரிவிக்கிறார்.

தீயை அணைத்த பிறகும், மரணித்தவர்களின் உறவினர்கள் அதிகமாக கூடியதால் அதிகாரிகள் திணறியுள்ளனர். நிலைமைகளை கட்டுக்கொள் கொண்டுவந்துக் கொண்டிருப்பதாக போலீஸ் கூறுகிறது.

700 பேர் மட்டுமே தங்குவதற்கு வசதிகளைக் கொண்ட சிறையில் 1900 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்த் அரசு உத்தரவிட்டுள்ளது.

Add Comment