சச்சின் காயமின்றி தப்பினார்.

பயிற்சியின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சின் “ஹெல்மெட்டை’ பலமாக தாக்கியது. இதில், அவர் காயமின்றி தப்பினார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும், டெஸ்ட் தொடர் வரும் 16ம் தேதி துவங்குகிறது. இதில், பங்கேற்பதற்காக சில இந்திய வீரர்கள் முன்னதாகவே தென் ஆப்ரிக்கா சென்றுள்ளனர். இவர்களுக்கு கிறிஸ்டன் கடின பயிற்சிகளை அளித்து வருகிறார். நேற்று இளம் உமேஷ் யாதவ் வீசிய பந்து, சச்சினின் “ஹெல்மெட்டின்’ இடது பக்கம் பலமாக தாக்கியது. உடனே யாதவ் உள்ளிட்டவர்கள் பதட்டம் அடைந்தனர். ஆனால் சச்சின் மிகவும் “ரிலாக்சாக’ தனது “ஹெல்மெட்டை’ கழற்றி, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தார். பின் Levitra online பயிற்சியை தொடர்ந்தார். அடுத்து ஸ்ரீசாந்த் மிக கவனமாக வீசிய பந்து, சச்சினின் முழங்கால் அளவுக்கு மட்டும் எழும்ப, அனைவரும் சிரித்து விட்டனர். இது குறித்து சச்சின் கூறுகையில்,””வலை பயிற்சியின் போது இத்தகைய சம்பவங்களை தவிர்க்க முடியாது. காயம் ஏற்படாமல் இருக்க வேண்டும். அவ்வளவு தான்,”என்றார்.

Add Comment