இந்தியா “சூப்பர்’ வெற்றி: கோப்பை வென்று அசத்தல்

காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி மீண்டும் அசத்தியது. சென்னையில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் “சூப்பராக’ வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பையை கைப்பற்றியது. வெறும் 103 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி மிகப் பெரும் ஏமாற்றம் அளித்தது.
இந்தியா வந்த நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் buy Cialis online முடிவில் இந்தியா 4-0 என முன்னிலை பெற்று இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. “டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் வெட்டோரி, பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் ஜாகிர் கானுக்குப் பதில் முனாப் படேல் இடம் பெற்றார். நியூசிலாந்து அணியில் மெக்கே நீக்கப்பட்டு, எலியாட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
துவக்கம் சரிவு:
நியூசிலாந்து அணிக்கு பிரண்டன் மெக்கலம், கப்டில் துவக்கம் கொடுத்தனர். பிரவீண் குமாரின் முதல் ஓவரில், கப்டில் “டக்’ அவுட்டாகி சரிவை துவக்கி வைத்தார். மறு முனையில் ஆஷிஸ் நெஹ்ராவின் ஓவரில் 3 பவுண்டரி அடித்து மிரட்டிய பிரண்டன் மெக்கலம் (14), அவரது வேகத்திலேயே அவுட்டானார்.
விக்கெட் மடமட:
ரோஸ் டெய்லர் (9) மீண்டும் ஏமாற்றினார். மிடில் ஆர்டரில் சற்று தாக்குப்பிடித்த ஹவ் 23 ரன்கள் எடுத்தார். எலியாட், “டக்’ அவுட்டாக, கேப்டன் வெட்டோரி தன் பங்கிற்கு 9 ரன்களுடன் திருப்தியடைந்து வெளியேறினார். எதிர்பார்க்கப்பட்ட நாதன் மெக்கலமும் (1), கைவிட்டார்.
அஷ்வின் அசத்தல்:
சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் அசத்தினார். இவரது வலையில் அனுபவ ஸ்டைரிஸ்(24) முதலில் வீழ்ந்தார். பின் மில்ஸ் (4), சவுத்தி (0) ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் அவுட் செய்து, நியூசிலாந்தின் ரன் கணக்கை முடித்து வைத்தார் அஷ்வின்.
குறைந்த ஸ்கோர்:
கடைசி 32 ரன்களை எடுப்பதற்குள் 7 பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்து நடையை கட்ட, நியூசிலாந்து அணி 27 ஓவரில் 103 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இந்தியா சார்பில் அஷ்வின் 3, யுவராஜ், யூசுப் பதான், ஆஷிஸ் நெஹ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதிர்ச்சி துவக்கம்:
போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் காம்பிர் ரன் எதுவும் எடுக்காத நிலையில், அம்பயர் கெட்டில் பொரவ்வின் (இங்கிலாந்து) தவறான தீர்ப்பினால் வெளியேறினார். பின் வந்த விராத் கோஹ்லி (2) வெட்டோரியின் சுழலில் சிக்கினார்.
பார்த்திவ் அபாரம்:
பின் பார்த்திவ் படேலுடன், யுவராஜ் ஜோடி சேர்ந்தார். ஆடுகளம் சுழலுக்கு கைகொடுத்த நிலையில், இந்த ஜோடி நியூசிலாந்தின் பவுலிங்கை கவனமாக எதிர்கொண்டது. பின் அதிரடிக்கு மாற, வெட்டோரி செய்வதறியாது விழித்தார். மில்ஸ் ஓவரில் பார்த்திவ், 2 பவுண்டரிகள் அடிக்க, மறுமுனையில், நாதன் மெக்கலத்தின் ஓவரில் சிக்சர், பவுண்டரியாக விளாசினார் யுவராஜ்.
வெட்டோரி பந்தில் “சூப்பர்’ சிக்சர் அடித்த பார்த்திவ், தொடர்ந்து இரண்டாவது அரைசதம் அடித்தார். பின் எலியாட் பந்தில், பார்த்திவ் பவுண்டரி அடிக்க, இந்திய அணி 21.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு, 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது.
பார்த்திவ் (56), யுவராஜ் (42) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து இந்திய அணி 5-0 என்ற கணக்கில். தொடரை முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது.
ஆட்டநாயகனாக யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
தொடர் நாயகன் விருதை காம்பிர் தட்டிச் சென்றார்.
நெஹ்ரா “150′
நேற்று நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலத்தை அவுட்டாக்கிய, ஆஷிஸ் நெஹ்ரா, ஒருநாள் போட்டிகளில் 150 வது (113 போட்டி) விக்கெட் வீழ்த்தும், 11வது இந்திய வீரர் ஆனார். இதற்கு முன், கும்ளே (334), ஸ்ரீநாத் (315), அகார்கர் (288), கபில் தேவ் (253), ஹர்பஜன் (238), ஜாகிர் கான் (230), வெங்கடேஷ் பிரசாத் (196), மனோஜ் பிரபாகர் (157), சச்சின் (154), இர்பான் பதான் (152) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
ஐந்தாவது முறை
நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய இந்தியா(5-0), ஒரு நாள் அரங்கில் 5வது முறையாக தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது. இதற்கு முன், இலங்கை ( 3-0, 1982-83), நியூசிலாந்து (4-0, 1988-89), ஜிம்பாப்வே (3-0, 1992-93), இங்கிலாந்து (5-0, 2008-09) அணிகளுக்கு எதிரான தொடரில் முழுமையாக வெற்றி பெற்றுள்ளது.
காம்பிர் “டாப்’
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில், அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் காம்பிர் (329) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இரு இடங்களில் விராத் கோஹ்லி (234), பிராங்க்ளின் (187) உள்ளனர். இவ்வரிசையில் “டாப்-5′ வீரர்கள் விபரம்:
வீரர்/அணி போட்டி சதம் அரைசதம் ரன்கள்
1. காம்பிர்(இந்தியா) 5 2 – 329
2. விராத் கோஹ்லி(இந்தியா) 5 1 2 234
3.பிராங்க்ளின்(நியூசி.,) 3 – 2 187
4.ஸ்டைரிஸ்(நியூசி.,) 5 – 1 161
5.யூசுப் பதான் (இந்தியா) 5 1 – 152
அஷ்வின் அபாரம்
பந்துவீச்சில் இந்திய வீரர் அஷ்வின், 5 போட்டிகளில் பங்கேற்று 11 விக்கெட் வீழ்த்தி, முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்து யூசுப் பதான் (8), ஸ்ரீசாந்த் (7), மெக்கே (7) உள்ளனர். இவ்வரிசையில் “டாப்-5′ வீரர்கள் விபரம்:
வீரர்/அணி போட்டி விக்கெட்
1,அஷ்வின்(இந்தியா) 5 11
2.யூசுப் பதான்(இந்தியா) 5 8
3.ஸ்ரீசாந்த்(இந்தியா) 2 7
4.மெக்கே(நியூசி.,) 4 7
5.யுவராஜ்(இந்தியா) 5 5
தொடர்ந்து 11வது தோல்வி
ஒரு நாள் அரங்கில் நியூசிலாந்தின் நிலைமை பரிதாபமாக உள்ளது. நேற்று தொடர்ந்து தனது 11வது தோல்வியை பெற்றது. சமீபத்திய முத்தரப்பு தொடரில் இலங்கை, இந்தியாவிடம் தலா ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. பின் வங்கதேசத்திடம் நான்கு போட்டிகளில் வீழ்ந்தது. தற்போது இந்தியாவிடம் 5 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிரான தொடரை, தொடர்ந்து 4வது முறையாக இழந்துள்ளது.
காம்பிர் மகிழ்ச்சி
சச்சின், சேவக், தோனி, ஹர்பஜன் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் காம்பிர் தலைமையிலான இளம் அணி இம்முறை சாதித்து காட்டியுள்ளது.
இது குறித்து கேப்டன் காம்பிர் கூறுகையில்,”” இரண்டாவது பேட்டிங் செய்யும் போது ஆடுகளத்தில் திருப்பம் ஏற்படும் என நினைத்தேன். முதலிலேயே சுழலுக்கு ஒத்துழைக்கும் என நினைக்கவில்லை. இருப்பினும், தொடரை முழுமையாக வென்றதன் பெருமை, ஒட்டுமொத்த அணியை சாரும். பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் என ஒவ்வொரு இளம் வீரர்களும் தங்கள் பங்கிற்கு ரன்களை குவிப்பது, விக்கெட்டுகள் வீழ்த்துவது என தொடர்ந்து எதிர்பார்ப்புக்கு ஏற்ப அசத்தினர்” என்றார்.
மீண்டும் 2வது இடம்
நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் முழு வெற்றியை அடுத்து, சர்வதேச ஒருநாள் ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி 121 புள்ளிகளுடன், மீண்டும் 2வது இடத்தை பிடித்தது. அடுத்த 3 இடங்களில் இலங்கை (118), தென் ஆப்ரிக்கா (115), இங்கிலாந்து (112) உள்ளன. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (128) உள்ளது.
விரைவான வெற்றி
நேற்று 173 பந்துகள் மீதம் இருக்கையில் இந்தியா வென்றது. இதன் மூலம் தனது நான்காவது பெரிய வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கென்யா (231 பந்து, 2001), கிழக்கு ஆப்ரிக்கா (181 பந்து, 1975), இலங்கை (175 பந்து, 2005) அணிகளுடன் விரைவான வெற்றியை பதிவு செய்துள்ளது. தவிர நேற்று மொத்தம் 3 மணி, 18 நிமிடம் மட்டும் போட்டி நடந்தது. இதில் இந்தியா, 1 மணி நேரம்16 நிமிடத்தில் மிக விரைவாக வெற்றியை எட்டியது.
ஸ்கோர் போர்டு
நியூசிலாந்து
கப்டில்(கே)பார்த்திவ்(ப)பிரவீண் 0(4)
மெக்கலம்-எல்.பி.டபிள்யு.,(ப)நெஹ்ரா 14(10)
ஹவ்(ப)யுவராஜ் 23(42)
டெய்லர்(கே)பார்த்திவ்(ப)நெஹ்ரா 9(9)
ஸ்டைரிஸ்-எல்.பி.டபிள்யு.,(ப)அஷ்வின் 24(45)
பிராங்க்ளின்-அவுட் இல்லை- 17(24)
எலியாட்-எல்.பி.டபிள்யு.,(ப)யுவராஜ் 0(5)
வெட்டோரி(கே)யுவராஜ்(ப)யூசுப் 9(11)
நாதன் மெக்கலம்(கே)யுவராஜ்(ப)யூசுப் 1(3)
மில்ஸ்(கே)திவாரி(ப)அஷ்வின் 4(7)
சவுத்தி(கே)ரோகித்(ப)அஷ்வின் 0(2)
உதிரிகள் 2
மொத்தம் (27 ஓவரில் ஆல் அவுட்) 103
விக்கெட் வீழ்ச்சி: 1-0(கப்டில்), 2-14(மெக்கலம்), 3-28(டெய்லர்), 4-71(ஹவ்), 5-73(ஸ்டைரிஸ்), 6-74(எலியாட்), 7-90(வெட்டோரி), 8-98(நாதன் மெக்கலம்), 9-103(மில்ஸ்), 10-103(சவுத்தி).
பந்து வீச்சு: பிரவீண் குமார் 6-1-20-1, ஆஷிஸ் நெஹ்ரா 5-0-34-2, முனாப் படேல் 3-0-9-0, அஷ்வின் 8-1-24-3, யுவராஜ் 2-0-5-2, யூசுப் பதான் 3-0-11-2.
இந்தியா
காம்பிர்(கே)மெக்கலம்(ப)நாதன் மெக்கலம் 0(3)
பார்த்திவ்—அவுட் இல்லை- 56(70)
கோஹ்லி(கே)டெய்லர்(ப)வெட்டோரி 2(8)
யுவராஜ்-அவுட் இல்லை- 42(46)
உதிரிகள் 7
மொத்தம் (21.1 ஓவரில் 2 விக்.,) 107
விக்கெட் வீழ்ச்சி: 1-0(காம்பிர்), 2-10(கோஹ்லி).
பந்து வீச்சு: நாதன் மெக்கலம் 6-1-26-1, வெட்டோரி 6-0-30-1, ஸ்டைரிஸ் 4-0-7-0, மில்ஸ் 1-0-15-0, எலியாட் 4.1-0-27-0.

Add Comment