கருணாநிதியை எதிர்த்து போட்டி : விடுதலையான சீமான் ஆவேசம்

முதல்வர் கருணாநிதி, சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்,” என, சிறையில் இருந்து விடுதலையான சீமான் ஆவேசமாக கூறினார்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்து விடுதலையான சீமான், சிறைக்கு வெளியே வந்து வேனில் நின்றபடி பேசியதாவது: “ஸ்பெக்ட்ரம்’ விவகாரத்தில், 1.76 லட்சம் கோடியை கொள்ளையடித்த கருணாநிதிக்கு ஜனநாயகத்தை பற்றி பேச என்ன தகுதி உள்ளது? இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து நான் பேசினால் உள்ளே போடுகின்றார். இப்பிரச்னையை தீர்க்க கருணாநிதிக்கு வக்கில்லை. என்னை உள்ளே போட்டால் பிரச்னை தீர்ந்து விடுமா? ஜெயலலிதாவும், கருணாநிதி ஊழல் செய்ததாக பேசுகின்றார். ஊழலைப் பற்றி பேச இரண்டு பேருக்கும் தகுதியில்லை. தேர்தல் வரை என்னை சிறையில் வைத்து விடலாம் என கருணாநிதி கணக்கு போட்டார். அது தப்பாகி விட்டது. இந்த முறை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம்.சட்டசபை தேர்தலில் கருணாநிதி எந்த தொகுதியில் நின்றாலும் அவரை Buy Amoxil எதிர்த்து போட்டியிடுவேன். என் மீது பொய் வழக்கு போட்டு, கருணாநிதி சர்வாதிகாரியாகி விட்டார். இவ்வாறு சீமான் பேசினார்.

Add Comment