அலகாபாத் நீதிமன்றத்திற்கு எதிரான கருத்தை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அலகாபாத் நீதிமன்றத்தில் “வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறும் போக்கு” காணப்படுவதாக கூறிய கருத்தை நீக்கமுடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வஃக்பு வாரியத்தின் நிலம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த Buy Lasix மனு மீது கடந்த நவம்பர் 6 ஆம் தேதியன்று நடைபெற்ற விசாரணையின்போது, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்களுக்கு வேண்டிய வழக்கறிஞர்கள் வாதாடும் வழக்குகளில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதாக உச்ச நீதிமன்றம் குற்றம் சாற்றியிருந்தது.

அத்துடன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஏதோ ஒன்று அழுகிவிட்டதாகவும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பல நீதிபதிகளிடம் “வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறும் போக்கு” (uncle judge’ syndrome) காணப்படுவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் சுதா மிஸ்ரா ஆகியோரடங்கிய அமர்வு காட்டமாக கூறியிருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும் களங்கப்படுத்துவதாக உள்ளதாகவும், எனவே அந்த கருத்தை நீக்க வேண்டும் என்றும் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் பி.பி. ராவ் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதனை ஏற்க நீதிபதிகள் கோபத்துடன் மறுத்துவிட்டனர்.அத்துடன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கோபத்துடன் வழக்கறிஞர் ராவை பார்த்து,” இதையெல்லாம் இங்கே சொல்லாதீர்கள்.எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துடன் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்பு உண்டு.

யார் ஊழல்வாதி; யார் நேர்மையானவர் என்று மக்களுக்கு தெரியும்.எனவே இதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்” என்று காட்டமாக கூறி அவரது வேண்டுகோளை ஏற்க மறுத்துவிட்டார்.

Add Comment