“கள்ளக்காதல்” களங்கம்! இஸ்லாத்தை ஏற்றதால், பெண் எம்.எல்.ஏ. மீது கொலை வெறி தாக்குதல்!

அஸ்ஸாம் மாநிலத்தின் “போர்கோலா” சட்டமன்ற பெண் உறுப்பினர் “ரூமி நாத்”.  2006 மற்றும் 2011 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், இளம் பெண் ரூமி நாத்.

கணவர் ராகேஷ் குமாருடன் 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தனிமையில் வாழ்ந்து வந்த ரூமி நாத் எம்.எல்.ஏ., இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதுடன் “ஜாக்கி ஜாக்கீர்” என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார். இந்த திருமணம் காரணமாக தற்போது “கரு”த்தரித்தும் உள்ளார்,ரூமி.  இந்த விஷயம், காவல் துறை, ஊடகம், நீதிமன்றம் என்று, ஊரறிய வெளிவந்த விஷயம் என்றாலும்,  முன்னாள் கணவர் ராகேஷ் விவாகரத்து கொடுக்க மறுப்பதுடன், ரூமிக்கு பல வழிகளில் தொல்லைகளை கொடுத்து வந்தார்.  இந்நிலையில், நேற்று 200க்கும் மேற்பட்ட அடியாட்களை அனுப்பி எம்.எல்.ஏ., ரூமி மற்றும் அவரது இரண்டாம் கணவர் ஜாக்கீரையும் கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.  முறையான விவாகரத்தும் செய்யாமல், கூலிப்படைகளை ஏவி கொலை வெறித்தாக்குதல் நடத்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல” பாதிக்கப்பட்டவர் மீதே சேற்றை வாரி இறைக்கும் விதமாக “கள்ளக்காதல்” என்று மீடியாக்கள் பரப்பும் செய்தியை என்னவென்று சொல்லுவது? வாய்க்கிழிய ஜனநாயகம் பேசும் மீடியாக்கள், சட்டத்தை கையிலெடுத்து, கொலைவெறித்தாக்குதல் நடத்தும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குவதற்கு, ஒரே ஒரு காரணம் தான் உள்ளது. அது, ரூமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார், என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. இந்தியாவில் கருத்து வேறுபாட்டால் பிரிந்து, பிறகு ஒரு மாற்று வாழ்க்கை தேடிக்கொண்ட எந்த பெண்ணுக்காவது, இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இந்த மீடியாக்கள் எப்படி வரிந்துக்கொண்டு “ஆபத் பாந்தவர்”களை போல் செயல் பட்டிருக்கும் என்பது, இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு புரியாமல் இல்லை.

no prescription online pharmacy justify”>முக்கிய குறிப்பு : 2006 தேர்தலில், பா.ஜ.க.வில்  எம்.எல்.ஏ. சீட் பெற்றுத்தந்த முன்னாள் கணவர் ராகேஷ், கருத்து வேறுபாடு காரணமாக, 2011 தேர்தலில், பா.ஜ.க. சீட் கிடைக்கவிடாமல் தடுத்து  விட்டார். இருப்பினும், காங்கிரஸ் சார்பாக  போட்டியிட்டு வெற்றி பெற்றார், ரூமி.

Add Comment