கடையநல்லூரில் வாந்தி,பேதிக்கு பலர் மருத்துவமனையில் சிகிச்சை!

கடையநல்லூரில் தொடரும் வாந்திபேதியை அடுத்து கடந்த மாதம் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று பல கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலைதூக்கியுள்ள நிலையில் வாந்தி பேதியும் பரவி வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகிறது.வாந்தி,பேதியின் தாக்கம் காரணமாக கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த குமந்தாபுரம்,சொக்கம்பட்டி,முத்துக்ருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 20 பேர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 50 க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Buy Ampicillin Online No Prescription style=”text-align: justify;”>வாந்தி பேதி காரணமாக பலர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை தொடர்ந்து சுங்கதரதுரை இணை இயக்குனர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் பலர் வாந்தி,பேதி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு சென்று வீடுகளில் உள்ள குடி தண்ணீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் மருந்துகளை கலந்து.பாதுகாப்பு நடை முறைகளை எடுத்துரைத்தனர்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 11 பேர் பலியாகிவிட்ட நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த சில தினங்களாக சுணக்கமான நிலை இருந்து வருகிறது. நகராட்சி பகுதியில் அதிகளவில் காணப்படும் சுகாதாரகேடு மக்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை மற்றும் மருத்துவ துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் நகராட்சி நிர்வாகமும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் நகராட்சியில் சுகாதாரகேடு கடந்த பல மாதங்களாக காணப்பட்டு வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சலால் பரிதவித்து வரும் கடையநல்லூர் மக்கள் தற்போது வேகமாக பரவிவரும் வாந்தி,பேதியால் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். ஏராளமான சிறுவர் சிறுமியர்களுக்கு வாந்தி,பேதி காய்ச்சல் தென்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.டெங்குவை தொடர்ந்து வாந்தி,பேதியும் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அதிகமான அச்சம் காணப்படுகிறது.

தகவல்:பஷீர்,நாராயணன்.

Add Comment