கடையநல்லூரில் இன்று மட்டும் 15 பேர் வாந்தி,பேதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

ஜூலை,4:கடையநல்லூரில் தொடரும் வாந்திபேதியை அடுத்து கடந்த மாதம் இரண்டு buy Doxycycline online பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர். இதனை தொடர்ந்து நேற்று சுமார் 20 பேர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதனை தொடர்ந்து இன்று சுமார் ரஹ்மாநியாபுரம் மற்றும் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 16 பேர் வாந்தி,பேதி பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கடையநல்லூரில் வேகமாக பரவி வரும் வாந்தி பேதியால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

இன்று மட்டும் சுமார் 16 பேர் வாந்தி,பேதி காரணமாக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதை தொடர்ந்து.கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாந்தி,பேதி தடுப்பு மாத்திரைகளை விநியோகித்தனர்.மேலும் பாதுகாப்பு நடை முறைகளை எடுத்துரைத்தனர்.

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு 11 பேர் பலியாகிவிட்ட நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் கடந்த சில தினங்களாக சுணக்கமான நிலை இருந்து வருகிறது. நகராட்சி பகுதியில் அதிகளவில் காணப்படும் சுகாதாரகேடு மக்களை பெரிதும் கவலையடைய செய்துள்ளது. மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறை மற்றும் மருத்துவ துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் நகராட்சி நிர்வாகமும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தகவல்:பஷீர்,நாராயணன்.

Add Comment