கடையநல்லூர் பாப்பான்கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கடையநல்லூரில் அமைந்துள்ள பாப்பான்கால்வாய் கூவமாக மாறிவருவதால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கால்வாய் சுத்தப்படுத்தும் பணியில் பல லட்ச ரூபாய் கரைந்து போனது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மர்மக்காய்ச்சல், டெங்கு, மலேரியா, வாந்திபேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காணப்படும் நகர பகுதியாக கடையநல்லூர் இருந்து வருகிறது. இந்நகராட்சியில் பெருமளவில் காணப்படும் சுகாதாரகேடு தான் நோய்களுக்கு முக்கிய காரணம்.

கடையநல்லூரில் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகமும், சுகாதாரமற்ற முறையில் தொடர்ந்து விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நகராட்சியை பொறுத்தவரை சுகாதார பணிகளுக்கான பணியாளர்கள் போதுமான அளவில் நியமனம் செய்யப்படாத நிலையில் குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு தனியார் மூலம் துப்புரவு பணிகள் கண்காணிக்கப்பட்டு வந்தது.

எந்தநோயின் அறிகுறி என்றாலும் கடையநல்லூரில் தான் ஆரம்பம் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் நிலையில் கடையநல்லூர் சுகாதாரத்தை பாதுகாத்திட தமிழக அரசும், சுகாதாரத்துறை நிர்வாகமும் முயற்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு நகராட்சி நிர்வாகம் உரிய ஒத்துழைப்பினை வழங்குவதில்லை என்ற ஆதங்கம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இதனிடையில் கடையநல்லூர் கருப்பாநதி அணைக்குட்பட்ட பாப்பான்கால்வாயின் மூலமாக சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டது. கால்வாயின் அகலம் நாளுக்கு நாள் குறுகி வரும் நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளும் அவ்வப்போது நடந்து வருகிறது.

online pharmacy no prescription href=”http://kadayanallur.org/wp-content/uploads/2012/07/32.png”>

இருந்தபோதிலும் நகராட்சி பகுதியை ஒட்டி மட்டுமின்றி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கால்வாயில் காணப்படும் அசுத்தமான நிலைதான் தொற்றுநோய்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. விவசாய நிலங்களுக்காக அமைக்கப்பட்ட பாப்பான்கால்வாயில் ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் கழிவு இறைச்சிகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிகிறது. இப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் சிலவற்றில் அமைக்கப்படிருக்கும் கழிப்பிட கழிவுகள் நேரடியாக கால்வாயில் கலக்கின்றன.

இவற்றை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகத்திற்கு அவ்வப்போது உத்தரவிட்டு வருவதும், பெயரளவிற்கு ஒரு சில வீடுகளில் இதற்கான பணிகளை மேற்கொள்ளப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. கடையநல்லூர் நகராட்சியில் கடந்த திமுக., ஆட்சியில் காணப்பட்ட மர்ம காய்ச்சலின் போது பாப்பான் கால்வாயை சுத்தப்படுத்திட நகராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது நகராட்சி பகுதியில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சலை தொடர்ந்து பாப்பான்கால்வாயை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஒரு சில லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. பாப்பான்கால்வாயை சீரமைத்து சுகாதாரத்தை மேம்படுத்த பல லட்ச ரூபாய் செலவிடப்பட்டபோதிலும், கால்வாயில் தற்போது கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடப்பதுடன் இப்பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் சூழ்நிலை அதிகளவில் ஏற்பட்டுள்ளது. தற்போது கடையநல்லூரில் வாந்திபேதி வேகமாக பரவி வருவதால் பாப்பான் கால்வாயை தொடர்ந்து தூய்மைப்படுத்தும் வகையிலும், கால்வாயில் சுகாதாரத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், முக்கிய பொதுநல அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Add Comment