கோப்பை வென்றது வங்கதேசம்: ஜிம்பாப்வே ஏமாற்றம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5வது போட்டியில் வெற்றி கண்ட வங்கதேச அணி, ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி, கோப்பை வென்றது.
வங்கதேசம் சென்ற ஜிம்பாப்வே அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் ஜிம்பாப்வே அணி 2-1 என முன்னிலை வகித்தது. ஐந்தாவது போட்டி சிட்டகாங்கில் நேற்று நடந்தது. “டாஸ்’ வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா, பேட்டிங் தேர்வு செய்தார்.
தைபு ஆறுதல்:
முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணிக்கு பிரண்டன் டெய்லர் (0), மசகட்சா (6), டபெங்வா (9) உள்ளிட்ட “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் மோசமான துவக்கம் அளித்தனர். பின்னர் இணைந்த எர்வின், தைபு ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்த போது எர்வின் (46) அவுட்டானார். அபாரமாக ஆடிய தைபு (64) ஆறுதல் அளித்தார். கேப்டன் சிகும்புரா (23) ஓரளவு கைகொடுக்க, ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 3, மொர்டசா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தமிம் அபாரம்:
சுலப இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ் (2) மோசமான துவக்கம் கொடுத்தார். பின்னர் இணைந்த தமிம் இக்பால், சித்திக் ஜோடி ரன் மழை பொழிந்தது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் சேர்த்த போது தமிம் இக்பால் (95) சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டார்.
சித்திக் அரைசதம்:
அடுத்து வந்த ரகிபுல் ஹசன் (0), கேப்டன் சாகிப் அல் ஹசன் (11) ஏமாற்றினர். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சித்திக் (56*) Doxycycline No Prescription அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். வங்கதேச அணி 43 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என கைப்பற்றியது. வங்கதேசத்தின் தமிம் இக்பால் ஆட்ட நாயகனாகவும், அப்துர் ரசாக் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Add Comment