சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்

ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.
ஹாங்காங்கில் உள்ள வான்சாய் நகரில், சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பைனலில் உலகின் “நம்பர்-4′ வீராங்கனையான செய்னா, சீனாவின் ஷிஜியன் வாங்கை (“நம்பர்-5′) எதிர்கொண்டார்.
முதல் செட்டை ஷிஜியன் வாங் 21-15 எனக் கைப்பற்றினார். பின்னர் எழுச்சி கண்ட செய்னா, 2வது செட்டை 21-16 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அபார ஆட்டத்தை தொடர்ந்த செய்னா, 21-17 என கைப்பற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 11 நிமிடம் நடந்த பைனலில், செய்னா 15-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறு படைத்தார். விரைவில் “நம்பர்-1′ இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்காவது பட்டம்:
தற்போது செய்னா, நான்காவது சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன் இந்தோனேஷியா (2009, 10), சிங்கப்பூர் (2010) சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இது, இந்த ஆண்டு இவர் கைப்பற்றிய மூன்றாவது சூப்பர் சீரிஸ் பட்டம். தவிர, இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ், டில்லி காமன்வெல்த் பாட்மின்டன் ஒற்றையர் போட்டிகளில் தங்கம் வென்று சாதித்ததன்மூலம், இந்த ஆண்டு 5 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
சரியான பதிலடி:
ஹாங்காங் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில், சீனாவின் ஷிஜியன் வாங்கிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் செய்னா.
தனது வெற்றி குறித்து செய்னா கூறியது:
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றி, ஆசிய விளையாட்டில் கண்ட தோல்விக்கு பெரும் ஆறுதல் அளித்துள்ளது. இத்தொடருக்கு போதுமான பயிற்சி மேற்கொள்ளவில்லை. இருப்பினும் தங்கம் வென்றது உற்சாகம் அளிக்கிறது. பைனலில், முதல் செட்டை இழந்த போதிலும், நம்பிக்கையை இழக்கவில்லை. இதனால் அடுத்த இரண்டு செட்டை எளிதாக கைப்பற்ற முடிந்தது. சீன வீராங்கனைகளை buy Amoxil online வீழ்த்துவது சுலபமல்ல. இவர்கள் உடல் ரீதியாக மிகவும் வலிமையானவர்கள்.
நிறைய தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என நினைப்பேன். இதற்கேற்ப இந்த ஆண்டு 5 தொடர்களில் பட்டம் வென்றுள்ளேன். இந்த ஆண்டு எனக்கு மிகவும் ராசியானதாக அமைந்தது. “நம்பர்-1′ இடம் தான் எனது இலக்கு. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு(2012) தகுதி பெற போதுமான பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இவ்வாறு செய்னா கூறினார்.
28 ஆண்டுக்கு பின்…
ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் 28 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரில் பட்டம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக கடந்த 1982ல் நடந்த இத்தொடரில், இந்திய வீரர் பிரகாஷ் படுகோனே ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
“நம்பர்-1′ வாய்ப்பு
சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில், இந்தியாவின் செய்னா நேவல் (59611.2637 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் சீனாவின் இகான் வாங் (65308.9106 புள்ளி), ஜின் வாங் (64772.4017 புள்ளி), டென்மார்க்கின் டினி பயுன் (60400.0982 புள்ளி) ஆகியோர் உள்ளனர். விரைவில் வெளியிடப்பட உள்ள ரேங்கிங்கில், ஹாங்காங் சூப்பர் சீரிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற செய்னாவுக்கு, 9200 புள்ளி வழங்கப்படும் பட்சத்தில் மொத்தம் 68811.2637 புள்ளிகள் பெறுவார். இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய ஜின் வாங், 6420 புள்ளிகள் கூடுதலாக பெற்று 71192.4017 புள்ளிகள் பெறுவார். இதன்மூலம் செய்னா மீண்டும் “நம்பர்-2′ இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. வரும் 14ம் தேதி ஐதராபாத்தில் துவங்கவுள்ள இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பாட்மின்டன் தொடரில் சாதிக்கும் பட்சத்தில், செய்னா “நம்பர்-1′ இடத்துக்கு முன்னேறலாம்.

Add Comment