வங்கிகளில் கறுப்புப் பணம்:10 நாடுகள் தகவல் தர தயார்

சுவிட்சர்லாந்து உட்பட பத்து நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளன’ என, மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல சட்ட நிபுணருமான ராம்ஜெத்மலானி உள்ளிட்ட சிலர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் buy Viagra online செய்திருந்தனர். அதில், “இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நபர்களால், 70 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள, வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த வழக்கில், மத்திய அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணத்தை கண்டறிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுவிட்சர்லாந்து உட்பட பத்து நாடுகள், தங்கள் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய விவரங்களை, இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள முன் வந்துள்ளன. இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (டி.டி.ஏ.ஏ.,) மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை அடுத்து, இந்த நாடுகள் தகவல்களை பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளன.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment