மீண்டும் பன்றி காய்ச்சல்: கேரளாவில் 7 பேர் பாதிப்பு-ஒருவர் பலி

கேரள மாநிலம் கொல்லத்தில் பன்றி காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.

இப்போது மும்பையை தொடர்ந்து கேரளா மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. கொல்லம் பகுதிகளில் சீரன், ராக்கி, கிரிதர் மற்றும் மருத்துக் கல்லூரி மாணவர் ஒருவர் உள்பட 7 பேர் பாதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணு, பிந்து, நசீம், ஆகிய 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இக்காய்ச்சல் தாக்கி குண்டரை பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருவனந்தபுரம் கிங்ஸ் மருத்துவமனையில் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ராஜூ கூறும்போது இக்காய்ச்சல் தாக்குதல் உள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்ந்தால் மட்டும் குணப்படுத்த இயலும். பலர் தனியார் மருத்துவமனைக்கு போய் வி்ட்டு இங்கு வருகின்றனர் என்றார்.

கேரளாவில் பன்றி காய்ச்சலை தடுக்க அரசு தீவிர Buy cheap Lasix நடவடிக்கை எடுத்து வருகிறது.

Add Comment