டர்பனை கழற்றச் சொல்லி சோதனை : அடுத்த அவமானம் அரங்கேற்றம்

அமெரிக்க விமான நிலையங்களில் சோதனை என்ற பெயரில், இந்தியர்களை இழிவுபடுத்துவது தொடர்கதையாகிவிட்டது. மீரா சங்கர் விவகாரம் இன்னும் முடிவடையாத நிலையில், ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதரை சோதனை என்ற பெயரில், அமெரிக்க அதிகாரிகள், டர்பனை கழற்றச் சொன்ன விவகாரம் இப்போது வெளிவந்துள்ளது.

ஐ.,நா.,வுக்கான இந்தியத் தூதர் ஹர்தீப் பூரி. இவர் இரண்டு வாரங்களுக்கு முன், அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஹூஸ்டன் விமான நிலையத்தில் அவரது தலைப்பாகையான டர்பனை கழற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம், தன் கவலையை அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளது. Buy Bactrim Online No Prescription இவ்விவகாரம் குறித்து விசாரிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

சமீபத்தில் தான் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கரை, மிசிசிபி விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்ட விதம், சலசலப்பை கிளப்பியது. அவ்விவகாரம் முடியும் முன், அதே போன்ற மற்றொரு விவகாரம் வெளிப்பட்டுள்ளது, பரபரப்பை கிளப்பியுள்ளது.

Add Comment