கடையநல்லூரில் பாப்பான் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்!

ஜூலை 13,கடையநல்லூரில் பாப்பான் கால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த வீடுகளை இன்று தாசில்தார் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.

நீண்டகாலமாக விவசாயிகளின் Buy cheap Doxycycline பிரதான பிரச்சனையாக கருதப்படும் பாசனத்திற்கு சரியான முறையில் தண்ணீர் வரத்து இல்லை என்பது. திருநேல்வேலியில் நடந்த விவசாயிகளின் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய பிரச்சனை பற்றி முறையிட்டனர். வீரசிகாமணி,சேந்தமரம் மற்றும் அதை ஒட்டியுள்ள 34 குழங்களுக்கு பாசனத்திற்காக நேரடியாக வரக்கூடிய தண்ணீர் சரியான முறையில் வரவில்லை.இதற்க்கு காரணமான பாப்பன் கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி விவசாயத்திற்கு கிடக்கும் முறையான தண்ணீரை வழங்க ஆவன செய்யுமாறு முறையிட்டனர்.இதனை தொடர்ந்து இன்று காலை போதுபனைத்துரையினர் பாப்பன் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றினர்.
பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான சர்வே இடம் குறியீடு செய்யப்பட்ட நிலையில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. இதனை தொடர்ந்து இன்று காலை சுமார் 10 மணியளவில் தொடங்கிய இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ரஹ்மானியபுரம் பகுஹ்டியில் 6 வீடுகளும்,பரசுராமபுரம் வடக்கு தெருவில் 2 வீடுகள் மற்றும் மாவடிக்கால் பகுதிகளில் பல தென்னை மரங்களும் அகற்றபட்டன.

இந்த ஆக்கிரமிப்பு பணி தென்காசி தாசில்தார் தலைமையில்,கண்காணிப்பு குழு பொறியாளர் சிவகுமார் மற்றும் போலிஸார்களின் பாதுகாப்புடன் நடைபெற்றது.
இதனிடையில் பாப்பான் கால்வாயில் கழிவுகள் அதிகளவில் இருப்பதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும், இக்கால்வாயை சுத்தம் செய்திடவும் பொதுமக்கள் சார்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.

தகவல்:பஷீர்,நாராயணன்

Add Comment