குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது

ஜூலை. 14:கடந்த ஒரு மாத காலமாக ஏமாற்றிய குற்றால சீசன் தற்போது களை கட்டியுள்ளது. மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இதமான காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் பெய்கிறது.

இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

மெயினருவி, ஐந்தருவியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சீசன் களையட்டியதையடுத்து தமிழ்நாடு ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஐந்தருவி செல்லும் வழியில் உள்ள வெண்ணமடை குளத்தில் இன்று படகு சவாரி தொடங்கப்பட்டது. மொத்தம் 33 படகுகள் இயக்கப்படுகிறது. இதில் இரண்டு நான்கு இருக்கை பெடல் படகுகள் தலா 12-ம், நான்கு இருக்கை துடுப்பு படகுகள் 5-ம், தனி நபர் ஹயாக் வகை படகுகள் 4ம் அடங்கும்.

அரை மணி நேரத்திற்கு இரண்டு இருக்கை பெடல் படகுகளுக்கு கட்டணமாக 75 ரூபாயும், தனிநபர் ஹயாக் வகை படகுகளுக்கு Buy Amoxil 50 ரூபாயும், நான்கு இருக்கை பெடல் படகுகளுக்கு 100 ரூபாயும், நான்கு இருக்கை துடுப்பு படகுகளுக்கு 120 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கட்டணமே ஆகும். இந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்ததையடுத்து அங்குள்ள விடுதிகள் அனைத்து நிரம்பிவிட்டன. இதனால் தங்குவதற்கு இடம் கிடைக்காத சுற்றுலா பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Add Comment