நீங்கள் பிரியாணிப் பிரியரா?

அசைவப் பிரியர்களில், பிரியாணியை விரும்பாதாவர்கள் யாரும் கிடையாது. இதோ அருமையான, சுவையான பிரியாணி சமைக்கும் முறை.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 1 கிலோ
ஆட்டு இறைச்சி (அல்லது கோழி) – 1 1/2 கிலோ
வெங்காயம் – 3/4 கிலோ
தக்காளி – 3/4 கிலோ
மிளகாய் தூள் – தேவைக்கேற்ப
எலுமிச்சை – 2
தயிர் – 200 கிராம்
நெய் – 200 கிராம்
இஞ்சி விழுது – 150 கிராம்
பூண்டு விழுது – 150 கிராம்
புதினா & கொத்தமல்லி இலை – தோவைக்கேற்ப
கேசரி பவுடர் – சிறிதளவு
ஏலக்காய் – 4
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1. குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய், நெய் ஊற்றவும்.

2. எண்ணெய் சூடானவுடன் ஏலக்காயைப் போடவும்.

3. பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

4. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, புதினா மற்றும் கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.

5. லேசாக வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

6. இதற்கிடையே அரிசியை தண்ணீரி்ல் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி உடையாமல் இருக்க அதில பாதி எலுமிச்சம் பழச் சாற்றை பிழியவும்.

7. ஆட்டு இறைச்சியை (அல்லது கோழி) சுத்தம் செய்து அதில் உப்பு, மிளகாய் தூள், கேசரி பவுடர் கலந்து அதை வதக்கி வைத்திருப்பவையுடன் கலக்கவும்.

8. பிறகு இறைச்சி Buy Doxycycline வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 4 விசிலுக்கு வைக்கவும்.

9. ஆவியை நீக்கிவிட்டு தயிரைச் சேர்த்து மீண்டும் 4 விசிலுக்கு வைக்கவும்.

10. மீண்டும் ஆவியை நீக்கிவிட்டு அதில் அரிசியைப் போடவும்.

11. ஏற்கனவே குக்கரில் தண்ணீர் இருந்தால் அதற்கேற்ப அரிசிக்கு தண்ணீர் ஊற்றி 2 விசிலுக்கு வைக்கவும்.

12. 2 விசில் வந்ததும் ஆவியை நீக்கிவிட்டு குக்கரை சிறிது நேரம் மூடி வைக்கவும்.

இதோ சூடான, சுவையான பிரியாணி தயார்.

Add Comment