கனவு நனவானது: சவுரப் திவாரி

“” இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது,” என, சவுரப் திவாரி தெரிவித்துள்ளார்.
இந்தியா, online pharmacy without prescription இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 15 ம் தேதி இலங்கையில் துவங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. இதில், சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் அசத்திய சவுரப் திவாரி வாய்ப்பு பெற்றுள்ளார். ஜார்க்கண்டை சேர்ந்த 20 வயது இளம் வீரரான திவாரி, தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய “ஏ’ அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்திய அணியில் இடம் கிடைத்தது பற்றி திவாரி கூறியது:
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்பது தான் ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். அது நிறைவேறி உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. யுவராஜுக்கு பதில் அணியில் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதித்துக் காட்ட வேண்டிய நெருக்கடியும் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு திவாரி கூறினார்.
இரண்டாவது வீரர்:
கேப்டன் தோனிக்குப் பின், ஜார்க்கண்ட மாநிலத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார் சவுரப் திவாரி. கடந்த 2009 ம் ஆண்டு ஜார்க்கண்ட் அணி சார்பில் ரஞ்சி கோப்பையில் பங்கேற்ற சவுரப் திவாரி, 5 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் விளாசினார். அதற்குப் பின் மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற திவாரி, 419 ரன்கள் எடுத்து அசத்தினார். மேற்கண்ட செயல்பாடுகளின் அடிப்படையில் திவாரிக்கு, ஆசிய கோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பயிற்சி
ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி வீரர்களுக்கு, 2 நாள் பயிற்சி முகாம் சென்னையில் நடக்க உள்ளது. வரும் 11 மற்றும் 12 ம் தேதிகளில் இந்த முகாம் நடக்க உள்ளது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் தவிர, மற்றவர்கள் முகாமில் பங்கேற்கின்றனர். பயிற்சி முகாம் முடிந்து வரும் 13 ம் தேதி இந்திய அணி, இலங்கை செல்கிறது.

Add Comment