மதுவை பற்றி இஸ்லாம்,அறிவியல் என்ன சொல்லுகிறது”

kudiஇயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது.புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.

மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றை பாதிக்கச் செய்து அவனது வாழ்க்கையையும், அவனது குடும்பத்தினர் வாழ்க்கையையும், சீரழித்து சின்னாபின்னமாக்கக் கூடிய தீய பழக்கம் தான் குடிப்பழக்கம்.சண்டை சச்சரவுகள், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும், குற்றங்களும் மது எனும் அரக்கனின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.மகாயுத்தம், பஞ்சம், இயற்கை பேரழிவு, கொள்ளை நோய் ஆகிய இம்மூன்றும் சேர்த்து அழித்ததை விட மதுபானம் அதிகமான மக்களை கொள்ளை கொண்டுள்ளது.

பழங்காலத்தில் மன்னர்கள் சோமபானம் என பழச்சாறுகள் கொண்டு தயாரித்து விருந்து உபசரிப்புகளில் பயன்படுத்தி வந்தனர். தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் (நொதி) பழத்திலும், தானியங்களிலுள்ள மாவையும், சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.

அதுபோல் தற்போது தயாரிக்கப்படும் மதுவில் மூலக்கூறாக ஈதைல் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது.

மதுக்களில் உள்ள ஈதைல் ஆல்கஹாலின் அளவு

ரம் 50 – 60%

விஸ்கி, பராந்தி, ஜின் 40 – 45%

ஒயின் 10 – 15%

சாராயம் 40 – 50%

பீர் 4 – 8%

இதில் உள்ள ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடு பரவல் மூலம் இரத்தத்தில் வெகு விரைவில் கலக்கிறது. இதனால் உடனே போதை உண்டாகிறது.இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் தன்னை இழக்க ஆரம்பிக்கிறான். முதலில் தசை கட்டுப்பாடு இழக்கும். தொடு உணர்வு குறையும். சிந்தனை மாறும், வாய் வார்த்தை குளறும். நடையில் தள்ளாட்டம், அதிக மயக்கம், ஞாபகமறதி, குழப்பம் போன்றவை உண்டாகும்.

ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவிகிதம் ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. மீதமுள்ள மது முழுவதையும் கல்லீரல் அரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவி பல வகையான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.பின்பு உடல் நரம்புகள் பாதிப்படைந்து, பார்வை நரம்புகளும் பாதிக்கப்படும். பித்தம் அதிகம் சுரந்து குடலில் அழற்சி உண்டாகி கல்லீரல் செல்கள் சேதப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் தெரிவதில்லை.பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் இந்த மதுப்பழக்கம் நாள் ஆக ஆக, எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையையே உண்டாக்கும். தினமும் அருந்தும் எண்ணம் உண்டாகும். அருந்தும் அளவும் அதிகரிக்கும்.

இப்படி அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்களின் நரம்புகள் தளர்ச்சியடைந்து, கை, கால்கள் நடுக்கம் உண்டாகும். இந்த நடுக்கத்தைப் போக்க மேலும் மேலும் மது அருந்த ஆரம்பிப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.குடிப்பதற்காக பலவிதமான போலிக் காரணங்களைக் கூறி நியாயப்படுத்துவார்கள். மனைவி, மக்கள் உறவுகளுடன் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியங்களை அள்ளி விடுவார்கள்.காதல் தோல்வி, விரக்தி, குழந்தை இல்லையென பல ஆண்கள் மது அருந்துகிறார்கள். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே ஒழிய மாற்றத்தை உண்டு பண்ணாது என்பதை புரிந்து கொள்வதில்லை.பொதுவாக மது அருந்துவது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். மது குடிப்பது பற்றிய சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் பதற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும்.மெல்ல மெல்ல காரணமற்ற பயத்தால் தன் குடும்பம் பற்றிய அவநம்பிக்கையான எண்ணங்கள், தாம்பத்திய உறவில் விரிசல், சந்தேக எண்ணெங்கள் போன்றவை ஏற்படும். இதுபோல் உடலிலும், மனதிலும் பல பாதிப்புகள் உண்டாகும்.

மதுவினால் உண்டாகும் பாதிப்புகள்:

நாம் சாப்பிடுகின்ற எத்தகைய உணவும் சீரமணடைந்த பிறகு குடலில் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பலவகையான மாற்றங்களைப் பெற்று, உடலின் தேவைக்கு ஏற்ப பல பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள சத்துக்கள், கல்லீரல் சேமித்து வைக்கப்படுகிறது. அதுபோல அருந்தும் மதுவானது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்றடைகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்கள் போல் மதுவும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதாவது கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியில் அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப்பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிப்படைய வைக்கிறது.மதுவை தொடர்ந்து அதிகமாக அருந்தும்போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் ஆண்களுக்கும், 20 கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்படைகிறது.

மது அதிகமாக அருந்தும்போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. அதேநேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாக செலவழிக்கப்படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரைப் பாதிப்படைய செய்கிறது.கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குவதால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிந்துபோகின்றன. ஹையலின் என்ற பொருட்கள் கல்லீரலை இறுக்கி நோயாக மாற்றுகிறது. மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப்படிகிறது.துவக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தெரியவராது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண், கை கால் நடுக்கும் உண்டாகும்.

இஸ்லாம் மதுவை பற்றி என்ன Buy cheap Viagra சொல்லுகின்றது பார்ப்போம்

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: –
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத்
தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: –
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: –
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: –
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: –
நபி அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்

பேதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்

வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: –
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா

‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தியவனுக்கு நபி அவர்கள் கொடுத்த தண்டனை: –
நபி அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்: –
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்  அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின்.நிலைபாடு என்ன?

போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறியுள்ளார்கள்.அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் “அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் “மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (4071)

மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது குறைந்தளவிலான அல்கஹோல்(போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”. அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

Add Comment