விக்கிலீக்ஸ்:அஸென்ஜாவை விசாரணைச்செய்ய இயலாது – ஐ.நா பிரதிநிதி

ரகசிய விபரங்களை வெளியிட்டதற்காக விக்கிலீக்ஸ் மற்றும் அதன் ஸ்தாபகர் ஜூலியன் அஸென்ஜா Ampicillin online மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள சட்டத்தில் பிரிவுகள் இல்லை என கருத்து சுதந்திர பாதுகாப்பிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதர் பிராங்க் லாரியூ தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி டுடேக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸின் ஸ்தாபகருக்கெதிராக குற்றம் சுமத்தவும், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரவும் அமெரிக்காவிற்கு எவ்வித உரிமையுமில்லை என தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.

அஸென்ஜாவுக்கெதிராக இரண்டு விவகாரங்கள் உள்ளன. ஒன்று பாலியல் பலாத்கார குற்றத்திற்காக சுவீடனில் பதிவுச் செய்யப்பட்ட வழக்கு. இதுக்குறித்து நான் ஒன்றும் கூறவியலாது. குறிப்பிட்ட அந்த வழக்கில் அவருக்கு சட்டரீதியான எல்லா உரிமைகளும் அனுமதிக்கவேண்டும்.

ஆனால், விக்கிலீக்ஸ் ஒரு ஊடகம் என்ற நிலையில் செயல்பட்டதை குற்றம் சொல்லமுடியாது. தகவல்களை பரிமாறுவதில் பொறுப்பேற்க தேவையில்லை என்பது பொதுவான தத்துவமாகும்.

வெளியிடும் விபரங்கள் தெளிவாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறினாலோ, ஏதேனும் நபர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்தாலோ தான் இக்காரியத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளியிடும் தகவல்களால் ஒரு அரசுக்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது என்பதற்காக மட்டும் அதனை தடைச்செய்வதற்கோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ இயலாது என பிராங்க் மேலும் கூறினார்.

Add Comment