நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு !!!

தமிழ்நாடு மின்உற்பத்தி கழகம் விடுத்த அறிக்கையில் online pharmacy without prescription கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு காற்றாலைகள் மூலம் சராசரியாக 3500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் நேற்று 125 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதால் காற்றாலை, மின்வாரியத்தின் காலைவாரி விட்டது. இதனால் ஏற்படும் கூடுதல் மின்தடையை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த வருடம் காற்றாலை மின் உற்பத்தியில் ஆயிரம் மெகாவாட்டாக இருந்த ஏற்ற இறக்க வேறுபாடு இந்த ஆண்டு ஜுலையில் 2400 மெகாவாட்டாக அதிகரித்துவிட்டது. தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் அனல்மின் நிலையம், புனல் மின்நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் உட்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

சராசரியாக ஒரு நாளைக்கு 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. இவற்றை மேற்கண்ட மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.   ஆரல்வாய்மொழி, முப்பந்தல், தூத்துக்குடி, கயத்தாறு, உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளிலுள்ள காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் முக்கிய பங்கை வகித்து வருகிறது.

நமக்கு தேவையான மின்சாரத்தில் சராசரியாக 3,500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் நமக்கு அளித்துவந்தன. ஆண்டு தோறும் ஜுன் முதல் ஆகஸ்டு முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் அடிப்பதால் அதிக பட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்த மூன்று மாதங்களையும் “பீக் லோட்” மாதமாக அறிவித்துள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியது. காற்றாலைகள் மூலம் கடந்த 11-ந்தேதி 7.5 கோடி யுனிட் உற்பத்தியானது. தொடர்ந்து 12-ந்தேதி 7 கோடி, 13-ந்தேதி 7.1 கோடி, 14-ந்தேதி 5.3 கோடி, 15-ந்தேதி 3.2 கோடி, நேற்று 16-ந்தேதி வெறும் 1.6 கோடி யுனிட் மட்டுமே மின்சாரம் பெறப்பட்டது.

நடப்பாண்டு பீக் லோட் மாதத்தில் அதிகபட்ச மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காற்றாலைகள் உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.

இதனால் நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதனை பொறுத்துக் கொள்ள வேண்டும், பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Add Comment