பருவம் இருக்கும்போது…

செவிகளில் ஏறாததால்

செதில்களில் சேராதக் கல்வி;

பரிந்துரைகளைப் புறந்தள்ளிவிட்டு

பாடப்புத்தகங்களுக்குப்

பாடைக் கட்டியக்காலம்!

சுற்றித் திரிந்ததால்

தூரமானதுக் கல்வி;

மேல்நிலைக் கல்வியோ

பாரமானது!

”பாய்” பசங்களுக்கு

பயணம் உண்டு என

சிண்டுமுடித்த ஆசிரியர்களால்

துண்டு விழுந்தது என் படிப்பில்!

கெஞ்சிக் கொஞ்சிப் பார்த்த

பெற்றோர்களும் களைப்படைந்து

கடவுச் சீட்டைக் கரம் மாற்றினர்;

என்னைக் கடல் ஏற்றினர்!

சூடேற்றும் பாலையில்

ஈடேற்றம் ஏதுமில்லை;

அணைத்து அழ யாருமில்லை

அடுத்தவேளை உணவில்லை;

தேம்பியழும் என்னை

தாங்கிக்கொள்ள ஆளில்லை!

கல்லாதக் கல்வியால்

பொல்லாதப் பாலையில்

பிழைப்புக்காக!

வளர்ந்துப்போன வயதில்

தளர்ந்துப்போன நான்;

இழந்துப்போன கல்விக்கு

இழப்பீடேதுமில்லை!

பருவம் இருக்கும்போது

Buy Levitra Online No Prescription style=”text-align: justify;”>பட்டைத் தீட்டிக்கொள்ளுங்கள்;

முடிந்துப்போனப் பின்னே

முட்டிக்கொண்டு அழுவதில்

பயனில்லை!

-யாசர் அரஃபாத்

Add Comment