பர்மாவில் 2000 முஸ்லிம்கள் படுகொலை : தமிழக முஸ்லிம் அமைப்புக்கள் பாராமுகம்!

JULY 18,  மியான்மர் :

பர்மாவில் முஸ்லிம்கள் கொன்றொழிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில், தமிழக முஸ்லிம் அமைப்புக்கள், போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையளிக்கிறது.

இத்தனைக்கும், சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பர்மா வம்சாவழியை சேர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் “பர்மா தமிழர்கள் நல்வாழ்வு சங்கம்” போன்ற பல்வேறு அமைப்புக்களை வைத்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்து வருகின்றனர். பர்மாவில் சமீபத்திய கலவரங்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட  2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

90,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இத்தனை கொடூரங்கள் நடந்த பின்பும் தமிழகத்தில் உள்ள எந்த முஸ்லிம் அமைப்பும் பர்மா முஸ்லிம்களின் துயர் துடைப்பதில் முனைப்பு காட்ட வில்லை, என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும். இங்குள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. மக்கள் மன்றத்திலும் பிரச்சாரங்களை முடுக்கி விடவில்லை. அதே நேரம் டெல்லியில் உள்ள முஸ்லிம் அமைப்புக்கள்,  இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள 300 பர்மா அகதிகளுக்கு, தங்களாலான பொருளுதவியும்  இருப்பிட  வசதியும் எற்படுத்திக்கொடுத்துள்ளன. உத்தரபிரதேச முஸ்லிம்கள், நாளும் பல தாக்குதலுக்குள்ளாகி வரும் இந்த நேரத்தில், அவர்களால் இது விஷயத்தில் கவனம் செலுத்த முடிய வில்லை. பீகார் மாநில முஸ்லிம்கள் “ATS” போலீஸ் படையின் பெரும் சவால்களை சந்திக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேற்கு வங்கம் உள்ளிட்ட வேறு மாநில முஸ்லிம்களாலும், ஒன்றும் செய்ய  இயலாத நிலையில்,  தமிழகத்தில் மட்டும் தான் இதற்க்கான அடித்தளம் அமைத்து செயல்பட முடியும்.  உலக முஸ்லிம்கள் யாவரும் சகோதரத்துவம் பேண வேண்டிய நிலையிருந்தாலும், தமிழகத்தில் பர்மா வம்சாவழி முஸ்லிம்கள் கணிசமாக வாழ்ந்து வருவதாலும், நிவாரண உதவிகள் செய்திடும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் உள்ளவர்களாகவும், உள்ளனர்.  ஒரு தூண்டுகோல் தேவை என்ற வகையில், இங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் முயற்சித்தால், உதவிகளை ஒன்றிணைக்கவும் அரசியல் ரீதியான தீர்வுகளை வழங்கி பர்மா முஸ்லிம்களின் கண்ணீரை துடைக்க முடியும்  என்பது, நடுநிலையான முஸ்லிம்களின் எண்ணமாக உள்ளது. buy Bactrim online களத்தில் இறங்குமா கட்சிகள்?

Add Comment