மீண்டும் இணையும் பயஸ்-பூபதி ஜோடி

அடுத்த ஆண்டு நடக்க உள்ள சென்னை ஓபன் மற்றும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர்களின், இரட்டையர் பிரிவு போட்டிகளில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி இணைந்து விளையாட உள்ளனர்.
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி. கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பயஸ் 12, பூபதி 11 முறை பட்டம் வென்று சாதித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து, பிரெஞ்ச் ஓபன் (1999, 2001) மற்றும் விம்பிள்டன் (1999) கிராண்ட்ஸ்லாம் தொடர்களை கைப்பற்றி உள்ளனர். பல வெற்றிகளை குவித்து வந்த இந்த ஜோடி, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தது. இடையில் ஒரு சில தொடர்களில் பங்கேற்றாலும், நீடிக்க வில்லை. இந்நிலையில், இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள சென்னை ஓபன் (ஜன. 3-9) மற்றும் ஆஸ்திரேலியன் ஓபன் (ஜன. 17-30) டென்னிஸ் தொடர்களில் விளையாட உள்ளனர்.
இது குறித்து லியாண்டர் பயஸ் கூறியது: மகேஷ் பூபதியுடன் இணைந்த அடுத்த ஆண்டு டென்னிஸ் தொடர்களில் விளையாட உள்ளேன். இதில், எங்களது செயல்பாடுகள் எப்படி அமைகிறதோ, அதன் அடிப்படையில் தொடர்ந்து விளையாடுவது பற்றி முடிவு செய்வோம். கடந்த 2 ஆண்டுகளாக செக் குடியரசின் லூகாஸ் லூயிவுடன் இணைந்து விளையாடி வந்தேன். இந்த ஆண்டின் கடைசியில் எங்கள் கூட்டணி, பெரிய அளவில் சோபிக்க வில்லை. இதே போல, மகேஷ் பூபதியுடன் இணைந்து விளையாடி வந்த பெலாரசின் மேக்ஸ் மிர்னி, செர்பியாவின் டேனியல் நெஸ்டருடன் இணைய உள்ளார். இதனால் நானும், மகேஷ் பூபதியும் இணைந்து விளையாட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு Ampicillin No Prescription பயஸ் தெரிவித்தார்.

Add Comment