ஒத்துமே.. யில்லாதெ.. கொறெதான்…

ஒத்துமே.. யில்லாதெ.. கொறெ…

“அஸ்ஸலாமு அலைக்கும்.. என்னப்பா அஹமது, எப்படியிருக்க.. நல்லாயிருக்கியா? ஊட்லெ மனைவி புள்ளைங்களல்லா.. நல்லா இருக்குதுவளா..? இங்க வா.., இப்படி இரு, ‘ஏப்பா டீ மாஸ்ட்டர் நம்ம சார்புலெ அஹமதுக்கு ஒரு சூப்பர் டீ போடு பாப்போம்’ ஆமா.. அஹமது சீனி நார்மலா தான எப்படி…”

“வா அலைக்கும் சலாம்.. உசேன், அல்ஹம்துலில்லாஹ்.. வுட்லே எல்லாரும் நல்லாயிருகாங்கோ.. அதெல்லாம் ஒன்னும் வாண்டாம் உசேன். எதுக்கு ஒங்க சார்பா டீ.. கீ..னூ.., நானே காசு கொடுத்துக்கறேன். ‘மாஸ்ட்டர் சீனி நார்மலா போடுங்கோ அரைக்கிளாஸ் இருந்தா போதும், ரெம்ப போட்றாதியோ’ ஆங் சொல்லு உசேன். எப்பிடியிருக்கே.. நான் இப்போ, வோங்கூட்டுக்கு போயிட்டுத்தான் வா..ரேன். ஊட்லெதான் சொன்னாங்கோ நீ சாயாக்கடையிலெ இருக்கிறதா.., அதான் இங்கே வந்தேன்.

ரெம்ப நாளாச்சே ஓங்கூட பேசி.. ஊருக்குள்ளெ ஒரே காச்சலு.., காலாரா..னு மாரிமாரி வாயாலேயும் வயத்தாலேயியும் போயிக்கிட்டு இருக்கிறதாலே.. எனக்கு போனுக்குமேலே போனு.. வந்துக்கிட்டிருக்கு, நம்ம அமைப்புலெ நம்மளெ தூக்கி ஒரு பொருப்புலெ போட்டதாலெ, ரத்தம் வேணும்னு.., அது வேணும்னு, இதுவேணும்ணு அங்கையும்.., இங்கையும் வெளியூரும்னு போயிட்டிருக்கிறனாலே ஒன்னே பாக்க முடியாமே போச்சு.., இண்ணைக்கு கொஞ்சம் பிரியா இருக்கமே.. சரி.. நீ ஓய்யாம ஊட்லே வந்து விசார்ச்சுட்டு போனதா சொன்னாங்களேனுதான் போயி பாத்துட்டு போவேமேனு வந்தேன். சொல்லு உசேன்.. என்ன விஷேசம்”

“இல்லே, வந்து நம்மெ வூட்லே ஏம்புள்ளையோ.. ஷாபான் பதினாலுலே நோன்பு வைக்கனும்னு சொல்லுச்சுவோ.. ஏற்க்கெனவே பள்ளிவாசல்லே நோட்டீஸ் போர்டுலே இருக்கிறே சர்க்குலருலே வியாழக்கிழமே மாலையிலெ ஷபே பராத் இரவுனு ஜமாத்துஉலாமாவுலேயிருந்து ஒரு செய்தி வெளியிட்டிருக்காங்கோ அப்டினா.. வெள்ளிக்கிழமே ராத்திரி சுன்னத்தான நோன்பு வைக்கணும். ஆனா வெள்ளிக்கிழமெ ராத்திரி நோன்பு வைக்கப்படாதுனு சொல்வாங்களே..?

அதுமட்டுமில்லாமே ஒரு சிலரு புதன் கெழமே சாய்ந்தரமெ ஷபே பராத்துனு நோன்பு வெக்கப்போராங்கனு சொல்றாங்கோனு புள்ளெங்கெ சொல்லுச்சுவோ ரம்ஜான் வர்றதுக்கு முன்னாலே ஷாபான்.. லே ஒரு துப்புறவு இல்லாமே பொறெயெ பத்தி குளப்பமாயிருக்கே.. சரி நீங்கோ ஒங்கோ.. அமைப்புலெ ஒரு முக்கிய புள்ளியாச்சேனுதான் கேட்டுட்டு போவேம்னுதான் ஒங்க ஊட்டுக்கு வந்தேன்..,

பர்லான எம்புட்டோ விஷயங்களே இதுவோ.., அதான் ஏம்புள்ளையோ உட்டுட்டு சுன்னத்தானதுவுளெபோயி.. புடுச்சுக்குட்டு படுத்துறெ பாடு பெரும்பாடாயிருக்கு, மாரக்;கெ விஷயத்திலே அதைப்போயி கேட்டுட்டு வாங்கோ.., இதெப்போயி கேட்டுட்டு வாங்கோனு ஏம்புள்ளையோ என்ன படுத்துறெ பாடுயிருக்கே.., ரெம்பக் கஸ்ட்டம் அஹமதுபாய், சின்னப்புள்ளையிலே நான் எதையும் தெரிஞ்சுக்காமே அதிலையும் குறிப்பா மார்க்க விஷயத்தேப்பத்தி தெருஞ்சுக்காமே.. யிருந்தது எம்புட்டு தப்பா போச்சு.., வும்ங்கிறதுக்கும்.., ஆங்கிறதுக்கும் ஒங்களெ மாதிரி ஆள்க்களெ தேடி ஓடுறாப்பிலேயிருக்குனூ கவலெப்படுறேன் அஹமதுபாய்”

“ஷாபான்ந்தா போயாச்சே உசேன், கவலையெ விடு உசேன்..”

“ஐய்யய்யோ..? அதேன்னேப்பா அப்படிச்.. சொல்றியோ அஹமது.., ஷாபான் என்னவோ முடிஞ்சு வந்திருச்சு உண்மேதான். ஆனால் பிரச்சனனு ஆரம்பிக்கிறதே ரம்ஜான்லேதானே அஹமதுபாய்”

“ரம்ஜான்லே பிரச்சினையே இருக்ககூடாதே.., செய்யவுங்கூடாதே.. உசேன்”

“அப்டினுதான் எல்லோரும் நெனைக்கிறோம், ஆனா.. பிரச்சனையே ரம்ஜான்லேதான் ஆரம்பிக்குது அஹமதுபாய், ரம்ஜான் பொறே பாக்கிறதிலேயிருந்து ஆரம்பிச்சு திராவிய தொழுகையிலே.. யிருந்து பெருனா பொறெ கண்டு பெருனா குத்துபா தொழுவுறெ வரைக்கும் நம்ம ஊர்லே.. யிருந்து நம்ம நாடு வரைக்கும் தலையாயப் பெறச்சினையா தலெவிரித்துலோ ஆடுது..

நானூம், நீங்கோ மாத்திரமா ஆடுறோம்.., நம்ம மதமே.. வுலோ ஆடுது, நம்மொ ஆடுறதே பாத்து.. நம்ம சகோதர மதமும் கைதட்டி சிரிச்சுக்கிட்டு கொண்டாடுது.. ஏன்னா.. ஒரு ஒத்துமேயில்லாதே நெலெதான் நம்மள்ட்டா. காலெண்டர்லே அச்சடிக்கும்போது அவ.. னவே இஷ்ட்டத்துக்கு பொறெ கணக்கே அச்சடுச்சுப்போடுறனுவே, அரசாங்க கெஜட்டுலே ஒரு தேரியெ குறிப்பிட்டு லீவே வெளியிட்டு போடுறான்வோ.., நம்மளுக்குள்ளெ ஒரு ஹிஜ்ரா காலெண்டரே விஞ்சானபூர்வமா வெளியிட்டுப் போடுறோம்.., ஒங்கோ அமைப்புலெயிரந்தும் ஒறு தேரியே சொல்றியோ.. இன்னுமுள்ள பல அமைப்புலே.. யிருந்து ஒரு தேரியே சொல்றாங்கோ.., பத்தாதுக்கு டெல்லிலே.. யிருந்து ஒரு அறிவிப்பு தலெமே இமாம்ட்டயிருந்து வருது, இப்படி எல்லோருமா சேந்து.. என்னெமாரி ஒன்னு தெரியாதெவங்களெ போட்டு கொளப்பு கொளப்புனு கொளப்பி நோம்புக் கஞ்சிமாரி கிண்டிப்போடுறியோ.. அஹமதுபாய்”

“ஒண்ணூ.. தெரியாத.. வனு சொல்லிட்டு, இம்புட்டு விபரமா பேசிறே உசேன்?”

“எல்லாம் ஒங்களெ மாரி விபரமான ஆள்களோடே சேர்றனாலதானே அஹமதுபாய்”

“ஐய்ஸெ தூக்கி ஏந்..தலையிலே வச்சுட்டு இப்போ என்னெ சர்பந்தா கரைக்கப்பாக்கிறியே உசேன் அப்படித்தானே?”

“ச்சே.. அப்பிடியெல்லாம் சொல்லாறியோ அஹமதுபாய், நான் எதார்த்தமா உண்மையெதானே சொல்றேன் அஹமதுபாய்”

“சரிதான் உசேன், நீங்க சொல்றது சரிதான்.., நான் இப்போ.. ஒரு அமைப்புலே.. யிருக்கேனு வச்சுக்குங்கோ.., நான் தனிப்பட்ட மொறையிலே எதுவுமே சொல்ல முடியாது, ஏந்..தலைவெரு என்ன சொல்றாரோ அறெத்தான் நான் கேக்கமுடியும.. சொல்லெ முடியும் என்ன சொல்றே.. உசேன்?;”

“கோவிச்சுக்காத அஹமது.., அப்போ நீ பொறெ பாக்க மாட்டியா.. ஒங்கோ தலெவெரு என்ன சொல்றாரோ அறெத்தான் கேக்கூவியோ.., அப்போ.. ரசூல்லா.. ச்சொன்னமாரி ‘பொறெ கண்டு நோன்பு புடிங்கோனும் பொறெ கண்டு பெருநாள் கொண்டாடுங்கோ..னு சொல்றதெயெல்லாம் கேக்க மாட்டீங்கோ.., இப்படி நீங்க ஒண்ணும்.., டெல்லிலெ ஒண்ணும், விஞ்சான ரீதிலே ஒண்ணும் சொல்லிக்கிட்டு அலைஞ்சிக்கிட்டு, ஒத்துமேயான கயத்தே கட்டிப்புடிக்கிறெ இஸ்லாம்னூ சொல்லிக்கிட்டு அலைய்றியோ அப்படித்தானே அஹமதுபாய்”

“ஐய்யய்யோ.. உசேன் ஒங்க பேச்சே பாத்தா விபரம் கேக்ககிறெ மாரி தெரியலியே, ஏதோ பட்டிமன்றம் மாரியும், அடிக்க வர்ற மாரியுமுலோ தெரியுதூ..”

“தப்பா நெனச்சுக்குடாதப்பா அஹமது. விபரம் தெரியாத நாங்களே இப்படியிருக்கையிலே.., விபரம் தெரிஞ்ச நீங்களும் எப்படினூ.. யோசிக்கிறோம் அஹமது.. எழுபத்திரெண்டு கூட்டமா பிறிவாங்ககோனூ ரசூல்லா சொன்னதா சொல்வாங்கோ.. ஆனா.. இங்கே நம்மளே இப்போ.. எம்பத்திரெண்டு கூட்டமா போயிருக்கும்போலே”

“அஹ்.. ஹஹ்ஹா.. உசேன்.. நல்லெ ச்சொன்னெ உசேன்”

“என்ன அஹமது சிரிக்கிறியோ.., நான் ஏதேனூ தப்பாச் சொல்லிட்டனோ?”

“இல்லே.. உசேன் சரியாத்தான் சொல்றே..”

“போன பெருநானு நம்மூர்லே பெருநா தொழுகைக்கு நடந்த கொடுமையெ பாத்தா.. கேவலம், போலீஸ் ஸ்டேஷன்லெ போயி.. சகோதர மதத்தே சாந்த அதிகாரிங்கே நம்மள்ளெ வுள்ளவங்களெ சத்தம்போடுறெ மாரி வெச்சுக்கிட்டாங்கோ.. ச்சே.., இப்போ வரப்போறே பெருநாளுக்கு சேத்து, போனே வருஷமே மூனு நாளெக்கு நாங்கதான் பெருநாள் தொழுவே தொழ வெக்குவோம்னு ஒரு சாரரு பதிஞ்சு வெச்சிருக்கிறெதா பேசிக்கிட்டாங்கோ..,

யாரை பத்தி நாங்கோ என்ன சொல்லா..னூ எங்களுக்கு ஒண்ணுமே புரியலே.., தொழுக பள்ளிலே பாத்தா.. எட்டு ரக்காயத்து, இருபது ரக்காயத்துனு பன்னண்டு ரக்காயத்துனு அதுவேறே பெரிய பிரச்செனெ.., இப்பந்தான் ஒங்கள்ட்டெ கேக்கிறெ விஷயத்துக்கு வர்றேன்.. சொல்லுங்கோ அஹமதுபாய்..

பொறெ பாக்கிற விஷயமா ஒங்கோ அமைப்புக்கு சாதமா பேசாமே ஒரு நடு நிலெயிலே இருந்து அல்லாஹ்க்கு பயந்து ஒரு நாயமான முடிவே சொல்லுங்கோ.., இன்ஷா அல்லாஹ் என்னப்போலே தெரியாதவங்க ஒங்களெ மாதிரி தெரிஞ்சவங்க சொல்றதே கேட்டு நடந்துக்கறோம். எங்களுக்கு நேரானதெ சொன்னா ஒங்களாலெ எங்களுக்கும், நீங்க காட்னெ நேரான வழிலே செல்றதே வச்சு எங்களாலே ஒங்களுக்கு நண்மே கெடைக்கட்டும் சொல்லுங்க அஹமதுபாய்”

“எதெப்பத்தி கேக்கிறே உசேன்?”

“நம்மோ பொறெப்பாத்து நோன்ம்பு வைக்கிறதெலயிருந்து பெருநாள் தொழுகே வரைக்கும் சொல்லுங்கோ.. இப்போ மொதல்லே பொறெ பாக்கிறதே பத்தி சொல்லுங்கோ அஹமதுபாய்”

“நான் என்ன உசேன் புதுசா சொல்லிறேப்போறேன். எல்லாம் ஏற்கெனவே எல்லோராலும் சொன்னதெ..தான் நானும் சொல்ல முடியும். எல்லாத்தரப்புலே.. யிருந்தும் குர்ஆனையும், ஹதீசையும் ஆதாரமா கொண்டுதான் எந்தவொரு விஷயத்தையும் மேற்கோள் காட்டி மக்களுக்கு சொல்றாங்கோ, ஆனால் எல்லார் கிட்டேயும் ஏதாவது ஒரு விஷயத்திNலு எங்காவது ஒரு பக்கம் ஓட்டே யிருக்கத்தான் செய்யுது.

தன்னே ஒசத்திக்கிடனும்ங்கிறே நிலைக்கு வந்து சொத்தையும் பேரையும் பெருக்கிக்கிட்டு, தான் புடுச்சே முசலுக்கு மூனூ காலூனூ சொல்லிக்கிட்டு அல்லாக்கு பயப்படாதவங்களா நடந்து கொள்றதே நினைச்சா உண்மையிலே வருத்தமாதான் இருக்கு.., பொதுவா பொறெ பாக்கிறெ விஷயத்துக்கு வருவோம். நம்ம மதம் பொறைய மாதமா கொண்ட மதம்

நம்மளே மாரித்தான் சைனாவுலும் பொறையத்தான் மாசமா கொண்டாடறானுவோ… அவ்வுளவு பெரிய நாட்டுலெ அவ்வளவு பெரிய மக்கள் தொகையிலே பொறெ பெறக்குறெ நாளே ஒரே நாளாத்தான் கருத்து வேறுபாடில்லமே கொண்டிருக்காங்கோ..,

ஆனா.. நாமதான் எந்த நாட்லேயும் இல்லாத ஒரு ஒத்துமே யில்லாமே நடந்துக்குறோம், அதிலும் முக்கியமா ரம்ஜான்லேயயும், ஹஜ்ஜுலெயும் ரசூல்லா சொல்லியிருக்காங்கோ ‘பொறெக்கண்டு நோன்பு வைய்யுங்கோ, பொறெக்கண்டு நோம்பே விடுங்கோ.. பொறெக்கண்டு பெருநா கொண்டாடுங்கோ..’னு அதையும் மரிக்காமே நாமோ தானடிச்சநூப்புலே நடந்துக்கிட்டு இருக்கோம்.

அரபு நாட்லேயும் ஆப்பிரிக்கா நாட்லேயும் நம்ம ஆசியாவிலேயும் எல்லா நோன்புக் காலங்களிலும் பொறெ பிரச்செனெ முன்னெப்பின்னே வருதுங்கிறதுக்காக சவுதி மன்னர் பகத் இருந்த காலத்திலே, மலேசியா பிரதமர் மகாதிர் முஹமதும், இன்னொரு நாட்டு அதிபரு பாகிஸ்தானா.. இல்லே ஈரானு அதிபரானு சரியா ஞாபகமில்லே இவ்வோ எல்லோருமா சேந்து கூட்டா.. ஒரு ஸாட்லைட்டே வின்னுலே அனுப்பி.., ஒரு குறிப்பிட்டெ இடத்துலே நெல கொள்ளச்..சேசு, அதன் மூலமா அதுலே எப்போ பொறெ தெரியுதோ.. அப்போயிருந்து இந்த உலகத்திலே ஒரே நாள்லே நோன்பே வச்சுக்கடலாம், பெருநாளே வச்சுக்கடலாம்னு பேசி வெச்சாங்கோ ஆனா அதே நடமுறெ படுத்தாமே போயிட்டாங்கோ..,

அதுக்கப்புறம் கிட்டதட்ட இதே முயற்ச்சியே கையிலே எடுத்துக்கிட்டு விஞ்ஞான பூர்வமா சில ஆய்வுகளெ எடுத்துக்கிட்டு நம்ம நாட்லே யிருக்கிறெ ஒரு அமைப்பு சவுதி அரசாங்கத்திலே போயி ஹிஜ்ரா காலேண்டரே அடிப்படையா வெச்சு அறிவிப்பு கொடுக்கனுங்கிறப்போ.. ‘அதெல்லாம் முடியாதுனு’ சொல்லிட்டாங்கோ.. பொறெ பாக்கிறெ விஷயத்தே ரசூல்லா ஹதீஸ்லே பலயிடத்துலே சொல்லியிருக்காங்கோ ங்கிறதெனாலே.. அதெ மறுத்துட்டாங்கோ..,

இந்த நெலமையிலே சவுதிக்கும் நமக்கும் உள்ள தொலை தூரத்தே கணக்கிலெ கொண்டு ஒண்ணு சவுதிலே பொறெக்கண்டு நோம்பு வைச்சா.. அண்ணைக்கே நம்மளும் நோம்பு வைக்கனும், இல்லாட்டா மறு நாளைக்காவது நோம்பு வைக்கனும், அப்பிடி எதுவும் வாண்டாம்ணா.. பாகிஸ்தான் , சிரிலங்கா, இல்லேனா.. மலேசியா, சிங்கப்பூர் இதிலே ஏதாவது ஒரு நாட்லே பெறெக்கண்டா அதையாவது ஏத்துக்கிட்டு நோம்பு வைக்கணும்,

இப்படியி எதையுமே ஏத்துக்காமே ‘நாங்கோ கண்ணாலே கண்டாத்தான் நோம்பு வைக்குவோம்னு’ பிடிவாதமா.. யிருந்தா எப்படி? நமக்கு மேக்கே உள்ளவங்களும், நமக்கு கெழக்கவுள்ளவங்களும் நோம்பு வெக்கிறாங்கோ, நடூலெ.. யிருக்கிற நாமோ நோம்பு வெக்கலே.., மேலே ஊருக்காரனும், கீழ ஊருக்காரனும் நோம்பு வெக்கிறான். நம்மோ ஊர்க்காரன் நோம்பு வெக்கலே,

அதெவிடெ பெரிய கொடுமே என்னாணா..? மேல வூட்டுக்காரனும் கீழவுட்டுக்காரனும் நோம்பு வெக்கிறான். நடுவுலெ யிருக்கறெ நான் நோம்பு வெக்கலே.., அதெவிடக் கேவலம் நான் நோம்;பு வெக்கிறேன், ஏ..வுட்லெயிருக்கிறெ ஏம்மவன் நோம்பு வெக்கலே.., நாம்போயி பெருநா தொழுதுட்டு வற்ரேன். ஏம்மவன் மறுநாள் பெருநா தொழுஹே தொழுதுட்டு வர்ரான். என்னப்பா கொடுமே இது.. ச்சே இதுலே நாமோ பெருமையா பீத்திக்கறோம்.. நாங்கோ முஸ்லீம்னூ, நாங்கோ ஒரே அல்லாவே வணங்குறோம் ஒரே இமாமு பின்னாலே நிண்ணு தொழுவுறோம்னூ..

ச்சே.. கொஞ்சங்கூட வெக்கப்படாமே.. வேதனேப்படாமே நம்மே நாமே கூட்டம் போட்டுக்கிட்டு ஒருத்தரே ஒருத்தரே திட்டித் தீத்துக்கறோம், மேடையே போட்டுக்கிட்டு ‘வாரீயா.. வாதம் பண்ணுவோம்னு’ சவாலுவேறே.. விடுறோம், என்னையும் சேத்துத்தான சொல்றேன்;. தொழுகையெ பத்தி.., நோம்பே பத்தி.., ஜக்காத்தே பத்தி.., ஹஜ்ஜே பத்தி ச்சொல்றெ எல்லாயிடத்திலேயும் அல்லா.. பொறுமையெ பத்தியும், ஒத்துமேயெ பத்தியும், விட்டுக்கொடுக்குறெதெ பத்தியும் சொல்றான்.. அதே யாராவது ச்செய்றோமா? அப்படிச் செஞ்சா இப்படியெல்லாம் நடக்குமா..? நம்ம ஊர்லே.. நம்ம நாட்லே இப்பிடியெல்லாம் இல்லாத பொல்லாத பேரில்லாத நோய்யெல்லாம் வருமா? அதெப்பத்தி யாரும் யோசிக்கிறதில்லே,

இல்லாத பலெ கடவுளெ, பலசாதியா.. பிரிஞ்சிருக்குற..வங்கோ மொத்தமாக்கூடி தலையிலே தூக்கிவெச்சுக்கிட்டு கொண்டாடுறாங்கோ..? ஆனா.. இருக்கிறெ உண்மையான ஒரே இறைவனே ஈமான் கொண்டுட்டு, அவன் தந்த பெருநாளே நாமோ.., இத்துப்போன நூலாட்டோ துண்டு துண்டா கொண்டாடுரோம்.., இன்ஷாஅல்லா.. இந்த வருஷம் நம்ம மக்கோ ரம்ஜான் பொறெ பாக்கிற விஷயத்துலெ என்னெ செய்றாங்கோனு பாக்குவோம்.. ஒரு நிமிஷம் உசேன்.. யாரோ buy Cialis online செல்போன்லே கூப்புடுறாங்கோ.. என்னானு கேட்டுட்டு பேசுவோம்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.. அலோ.., யாரு..? அப்டியா..? சரி..சரி நான் இப்போ உடனே வந்தற்ரே… சரி.. சரி.. ஓக்கே…வா.., அலைக்கும் ஸலாம்”

உசேன்.. மன்னிக்கனும்.. இன்ஷாஅல்லா.. மற்றெதெ நாமோ இன்னொருதரம் பேசிக்கிடுவோம். அர்ஜெண்டா ஒரு விஷயமா கூப்புடுறாங்கோ போயிட்டு வர்றேன்.. வரட்டா.. உசேன், அஸ்ஸலாமு அலைக்கும்”

“இன்ஷாஅல்லாஹ் பேசிக்கிடுவோம்.. போயிட்டு வா… அஹமது. வ..அலைக்கும் ஸலாம்”

Add Comment