கிரிக்கெட் தூதர் சச்சின் *ஸ்மித் புகழாரம்

கிரிக்கெட் விளையாட்டின் மிகச் சிறந்த தூதராக திகழ்கிறார் இந்திய வீரர் சச்சின்,” என, தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் ஒரு “டுவென்டி-20′ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, Viagra No Prescription நாளை செஞ்சுரியனில் துவங்குகிறது. இதுவரை டெஸ்ட் அரங்கில் 49 சதம் கடந்துள்ள இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், தென் ஆப்ரிக்க தொடரில் 50 வது சதத்தை பதிவு செய்ய காத்திருக்கிறார். இந்நிலையில், சச்சினை வெகுவாக புகழ்ந்துள்ளார் தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித். இது குறித்து இவர் கூறியது: சச்சின் உலகின் மிகச் சிறந்த வீரர். கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் தூதராக செயல்பட்டு வருகிறார். எனது சிறு வயதில், சச்சினின் ஆட்டத்தை “டிவி’ யில் பார்த்துள்ளேன். அப்போது தான் அவரைப் போல கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற ஆசை எனக்குள் வளர ஆரம்பித்தது. இன்று நான் கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதற்கு அதுவே காரணமாக அமைந்தது.
சிறந்த பயிற்சியாளர்:
இந்திய அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறார் கிறிஸ்டன். எனது கிரிக்கெட் “ஹீரோக்களில்’ அவரும் ஒருவர். அவருடன் இணைந்து தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன். இந்திய வீரர்கள் அவர் மீது நல்ல மரியாதை வைத்துள்ளனர். இவ்வாறு ஸ்மித் தெரிவித்தார்.
உற்சாக வரவேற்பு:
இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு, தென் ஆப்ரிக்கா சார்பில் பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுவரை தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட எந்த அணிக்கும் அளிக்கப்படாத வரவேற்பு என அந்நாட்டு கிரிக்கெட் போர்டு தலைவர் ஜெரால்டு மாஜ்லோ தெரிவித்தார். இரு அணி வீரர்களும் இதில் கலந்து கொண்டனர். தென் ஆப்ரிக்க அதிபர் டுடஜெலி யோகா, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்திய அணியை பாராட்டிப் பேசிய யோகா கூறுகையில்,”” உலகின் நம்பர்-1 அணியான இந்தியாவுக்கு, அதற்கான முழுத் தகுதி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, இந்திய அணி, உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக தொடர்ந்து வெற்றிகளை குவித்துள்ளது. கிரிக்கெட் அரங்கில் நீண்ட காலமாக அசத்தி வரும், இந்திய வீரர் சச்சினுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்காத நினைவுகளை தந்த அவரது சிறப்பான ஆட்டத்துக்கு நன்றியை செலுத்த விரும்புகிறேன். அவர் சிறந்த வீரர், உண்மையான ஹீரோ, ஒரு விளையாட்டு வீரராகவும், கிரிக்கெட் வீரராகவும், மிகச் சிறந்த மனிதராகவும் உள்ள உங்களுக்கு எனது வணக்கங்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுகள் இடையிலான நட்புறவு, நீண்ட காலம் தொடர வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

டுமினி, போத்தா நீக்கம்
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க செல்வதால், இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான, தென் ஆப்ரிக்க அணியிலிருந்து போத்தா, டுமினி, பார்னல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். காயத்திலிருந்து மீண்டுள்ள கேப்டன் ஸ்மித், ஆம்லா ஆகியோர் நாளை நடக்க உள்ள முதல் போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணி:
ஸ்மித் (கேப்டன்), டிவிலியர்ஸ், காலிஸ், பிரின்ஸ், ஆம்லா, டேல் ஸ்டைன், மார்கல், மார்க் பவுச்சர் (விக்., கீப்பர்), டிசாட் சொபே, மெக்லாரன், பால் ஹாரிஸ் மற்றும் அல்விரோ பீட்டர்சன்.

Add Comment