3 ஜி சேவையைத் தொடங்கியது ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் தனது 3 ஜி சேவையைத் தொடங்கியது.

3 ஜி உரிமம் பெற்ற பிறகு முதல் முறையாக இந்த 3 நகரங்களில்தான் சேவையைத் தொடங்குகிறது ரிலையன்ஸ்.

நாட்டின் 13 வட்டாரங்களில் 3 ஜி உரிமை பெற்றுள்ளது ரிலையன்ஸ். உரிமம் பெறாத மற்ற பகுதிகளில், வேறு நெட்வொர்க்குகளுடன் பேசி ரோமிங் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விரைவில் நாட்டின் பிற பகுதிகளிலும் 3 ஜி சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் 3 ஜி வசதியைப் பெறும் வகையில் ஹேன்ட்செட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Lasix online style=”text-align: justify;”>ரிலையன்ஸ் 3 ஜி சேவையில் 28Mbps வேகத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Add Comment