ரேங்கிங் பட்டியல்: சேவக் தொடர்ந்து முதலிடம்

ஐ.சி.சி., டெஸ்ட் ரேங்கிங் பட்டியலில், இந்திய வீரர் சேவக் தொடர்ந்து “நம்பர்-1′ இடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் சேவக், 863 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே தென் ஆப்ரிக்காவின் ஆம்லா (842 புள்ளிகள்) மற்றும் இலங்கையின் ஜெயவர்தனா (836) உள்ளனர். இந்தியா தரப்பில் காம்பிர் (824) 6 வது இடத்திலும், சச்சின் (805) 7 வது இடத்திலும் உள்ளனர்.
டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங் Buy Ampicillin Online No Prescription பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் (867 புள்ளிகள்) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜாகிர் கான் 6, ஹர்பஜன் 7 வது இடத்திலும் உள்ளனர்.

Add Comment