650 ஊழியர்களை நீக்க யாஹூ திட்டம்: இன்று அறிவிப்பு

இணையதளத் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் ஒன்றான யாஹூ, இந்த வாரத்துக்குள் 650 பணியாளர்களை நீக்கவிருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

யாஹூவில் தற்போது 14100 பணியாளர்கள் உள்ளனர். செலவுக் கட்டுப்பாடு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இவர்களில் 5 சதவீதம் அதாவது 650 பேரை நீக்கப் போவதாக அறிவித்திருந்தது யாஹூ. இந்த வாரத்துக்குள் இந்த பணிநீக்கம் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Bactrim No Prescription justify;”>ஒரு காலத்தில் முதல் நிலையில் இருந்த யாஹூ, புதுமையான சேவைகளை அறிமுகப்படுத்ததாதால் தனது இடத்தை கூகுளிடம் பறிகொடுத்தது. யாஹூ சர்ச் எஞ்சினை மக்கள் பயன்படுத்துவதும் குறைந்தது.

பேஸ்புக் பிரபலமாகத் தொடங்கியதும் யாஹூ குழுக்களுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது. யாஹூவின் புதிய சிஇஓவாக கரோல் பட்ஸ் பதவியேற்ற பிறகு மேலும் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இழந்த பெருமையை மீட்கும் முயற்சியில் இப்போது தனது முன்னாள் எதிரி மைக்ரோசாப்டுடன் கைகோர்த்துள்ளது யாஹூ.

Add Comment