ஜனாதிபதியாகிறார் பிரணாப் முகர்ஜி!

நாட்டின் உயரிய மதிப்பு மிக்க பதவியான ஜனாதிபதிக்கு இன்று பிரணாப்முகர்ஜி தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கின்றனர். ஆளும் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவு அதிகம் இருப்பதால் இவர் சுமார் 70 சத ஓட்டுக்களை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஓட்டு எண்ணும் பணி துவங்கியிருக்கிறது. மதியத்திற்குள் இந்த முடிவுகள் தெரியவரும். பின்னர் அதிகாரிகள் ஜனாதிபதி வெற்றி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஜனாதிபதியான பிரதீபா பாட்டில் பதவி வரும் 24 ம் தேதி முடிவுறுவதால், 25 ம் தேதி பிரணாப் ஜனாதிபதியாக பதவியேற்பார். இவருக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

ஓட்டு எண்ணும் பணி தொடர்ந்து வருகிறது. மதியத்திற்கு மேல் முடிவுகள் Cialis No Prescription அறிவிக்கப்பட்டதும், பிரதமர் மன்மோகன்சிங் , காங்., தலைவர் சோனியா மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் சென்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

பதவி வகித்த ஜனாதிபதிகள்: இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் பட்டியல் வருமாறு: டாக்டர் . ராஜேந்திரபிரசாத் ( 1950- 1962 ) , டாக்டர் . சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ( 1962 – 1967) , டாக்டர் ஷகீர்உசேன் ( 1967 – 1969 ), வரகாகிரி வெங்கடகிரி ( 1969- 1974 ) டாக்டர். பக்ரூதீன் அலி அகம்மது ( 1974 – 1977 ) ,நீலம் சஞ்சீவரெட்டி ( 1977- 1982) , கியானி ஜெயில்சிங் ( 1982- 1987 ), ஆர் வெங்கட்ராமன் ( 1987- 1992 ), டாக்டர். சங்கர்தயாள் சர்மா ( 1992- 1997 ), கே.ஆர். நாராயணன் ( 1997- 2002 ), டாக்டர் ஏ.பி.ஜே.,அப்துல்கலாம் ( 2002- 2007 ), பிரதீபா பாட்டில் ( 2007 ஜூலை 25 முதல் 2012 ஜூலை 24 வரை) .

இதில் டாக்டர் . ராஜேந்திரபிரசாத் முதல் ஜனாதிபதி மற்றும் 2 முறை இந்த பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் பெறுகிறார். தமிழகத்தை சேர்ந்தவர் 3 பேர் இந்த பதவியில் இருந்துள்ளனர். டாக்டர் . சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் , ஆர் வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜே.,அப்துல்கலாம் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment