கடையநல்லூர்-குற்றாலம் பஸ் நிறுத்தம்மீண்டும் இயக்க கோரிக்கை

கடையநல்லூரில் இருந்து குற்றாலத்திற்கு கல்லூரி மாணவிகளின் வசதிக்காக இயக்கப்பட்ட பஸ் குற்றால சீசனுக்கு பயன்படுத்தப்பட்டு பஸ் இயக்கப்படாமல் இருப்பதாக பயணிகள் தரப்பிலும், மாணவிகள் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடையநல்லூரில் இருந்து குற்றாலம் மகளிர் கல்லூரிக்கு மாணவிகளின் நலனுக்காக பஸ் வசதி செய்யப்பட்டது. கடையநல்லூர், காசிதர்மம், அச்சன்புதூர் வழியாக குற்றாலத்திற்கு காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு நேரங்களிலும் இந்த பஸ் இயக்கப்பட்டு வந்தது. தடம் எண் 12டி எக்ஸ்பிரஸ் டவுன் பஸ்சாக இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டதுடன் மற்ற நேரங்களில் கடையநல்லூரிலிருந்து Buy Lasix Online No Prescription செங்கோட்டைக்கு இந்த பஸ் பயணிகளின் வசதிக்காக இயங்கி வந்தது.

இதனிடையில் தற்போது குற்றால சீசனை முன்னிட்டு இந்த டவுன் பஸ் தென்காசி- குற்றாலம், குற்றாலம் – ஐந்தருவி ஆகிய வழித்தடங்களில் மாற்றி இயக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவிகளின் நலன் கருதி இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ் தற்போது குற்றாலத்தில் இயக்கப்பட்டு வருவதால் கல்லூரி மாணவிகளும், காசிதர்மம், வடகரை, அச்சன்புதூர், பண்பொழி வழியோர பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மீண்டும் இந்த பஸ்சினை முறையான வழித்தடத்தில் மாணவிகளின் கல்வி நலன் கருதி இயக்க வேண்டுமென அச்சன்புதூர் டவுன் பஞ்.,தலைவர் டாக்டர் சுசீகரன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Add Comment