நிரா ராடியா, ராஜா, நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ், ஜெகத் காஸ்பர் வீடுகளில் சிபிஐ ரெய்ட்!

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு,அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது.

வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. Buy Ampicillin Online No Prescription மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின.

இதையடுத்து சமீபத்தில் நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் நீரா ராடியாவின்வீடு, அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீபா பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009ல் ராடியாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி சத்திரபூரில் உள்ள ராடியாவின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல பரகம்பா சாலையில் உள்ள ராடியாவின் அலுவலகமும் சோதனைக்குள்ளாகியுள்ளது.

தமிழகத்தில் 27 இடங்களில் சோதனை:

டெல்லியில் மட்டும் 7 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல தமிழகத்திலும் 27 இடங்களில் அதிரடியாக சோதனைகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர்கள் வீடுகளிலும் அதிரடியாக சோதனை நடந்து வருகிறது.

ராஜாவின் ஆடிட்டர்கள், நக்கீரன் வார இதழின் இணையாசிரியர் காமராஜ், பிரபல மத போதகர் ஜெகத் காஸ்பர், ராஜாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் சென்னை வீடு உள்ளிட்டவை ரெய்டுக்குள்ளாகியுள்ளன.

இதில் காமராஜ், ராஜாவின் நண்பர் என்பதால் சோதனை நடந்து வருவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ராஜா எம்.பியாக உள்ள நீலகிரி தொகுதிக்குட்பட்ட ஊட்டியிலும் ரெய்டுநடந்து வருகிறது.

கிட்டத்தட்ட100க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Add Comment