விக்கிலீக்ஸ்:ஈரானின் அணுசக்தித் திட்டம் பாதுகாப்பிற்கானதே – ஆஸ்திரேலியா

ஈரானின் அணுசக்தித் திட்டம் அணு ஆயுதப்போரை தவிர்ப்பதற்கான ரீதியில் அமைந்துள்ளது Bactrim No Prescription என ஆஸ்திரேலியா கருதுவதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளுடைய நிலைப்பாட்டிறுகு விரோதமானது ஆஸ்திரேலியாவின் கருத்து என்பது குறிப்பிடத்தக்கது. ஈரான் ரவுடி நாடு என்ற அபிப்ராயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு உடன்பாடில்லை.

ஈரானுக்கெதிராக இஸ்ரேல் ராணுவத் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், அது அணுஆயுதப் போருக்கு வழிவகுக்கும் எனவும் ஆஸ்திரேலியா கருதுவதாக அமெரிக்க தூதரக ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது.

கான்பெர்ராவில் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட செய்தியை விக்கிலீக்ஸ் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிகையின் மூலம் வெளியிட்டது.

ஈரானின் அணுசக்தி திட்டம் எதிரிகளின் தாக்குதலை தவிர்ப்பதற்கான திட்டம் மட்டுமே எனவும், ஈரான் ஒரு ரவுடி நாடு எனக் கூறுவது தவறானதாகும் என்பது ஆஸ்திரேலியாவின் இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகளின் நிலைப்பாடாகும்.

Add Comment