பஞ்சாப் அணி நீக்கம் : மும்பை ஐகோர்ட் கண்டனம்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நீக்கம் தொடர்பான விவகாரத்தில், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) மும்பை ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 2008 ம் ஆண்டு முதல் “டுவென்டி-20′ போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த 3 ஆண்டுகளாக விளையாடி வந்தது. இதன் உரிமையாளர்களில ஒருவராக பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உள்ளார். இந்நிலையில், உரிமையாளர்கள் குறித்து சரியான தகவல்களை தெரிவிக்க மறுத்ததாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மீது, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) குற்றம் சாட்டியது. இதனையடுத்து Buy Viagra கடந்த அக். 10 ம் தேதி அணியின் உரிமையை, பி.சி.சி.ஐ., அதிரடியாக ரத்து செய்தது. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில், பஞ்சாப் அணி நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதன் முடிவில், பி.சி.சி.ஐ., யின் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்தது மும்பை ஐகோர்ட்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பி.சி.சி.ஐ., கடந்த திங்கட் கிழமை மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை நேற்று, மும்பை ஐகோர்ட்டில் நடந்தது. இதில், பி.சி.சி.ஐ., யின் மேல் முறையீட்டு மனுவை ஐகோர்ட் ரத்து செய்தது. பஞ்சாப் அணி, உரிமையாளர்கள் குறித்த தகவலை முறையாக தெரிவித்துள்ளது என்ற கூறிய மும்பை ஐகோர்ட், பி.சி.சி.ஐ., யின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்து அடுத்த ஆண்டு நடக்க உள்ள 4 வது ஐ.பி.எல்., தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பங்கேற்க அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, வரும் ஜன. 8, 9ம் தேதிகளில் நடக்கும் ஐ.பி.எல்., வீரர்களுக்கான ஏலத்திலும் பங்கேற்கலாம்.

Add Comment